சேலம் பெரியார் பல்கலை பேராசிரியர் திடீர் பணியிடைநீக்கம்! 8 நாளில் ஓய்வு பெற இருந்தார்!!
சேலம் பெரியார் பல்கலை
டீன் கிருஷ்ணகுமார்,
இன்னும் 8 நாளில் ஓய்வு பெற
இருந்த நிலையில், ஊழல்
புகாரின்பேரில் திடீரென்று
பணியிடைநீக்கம்
செய்யப்பட்டார்.
சேலம் பெரியார் பல்கலையில்
இயற்பியல் துறைத்தலைவராகவும்,
பல்கலை டீன் ஆகவும்
பணியாற்றி வந்தவர் கிருஷ்ணகுமார்.
இவர், கடந்த 2010ம் ஆண்டு
சிறிது காலம் பெரியார் பல்கலை
துணைவேந்தராகவும் பொறுப்பு
வகித்தார். அதன்பிறகு,
புதிய துணைவேந்தராக
முத்துச்செழியன் நியமிக்கப்பட்டார்.
பேராசிரியர் கிருஷ்ணகுமார்,
துணைவேந்தர் பொறுப்பில்
இருந்தபோது, பல்கலை விருந்தினர்
மாளிகையை புதுப்பிப்பதற்காக
குளிர்சாதன உபகரணங்கள்,
அறைகலன்கள் கொள்முதல்
செய்ததில் பல லட்சம் ரூபாய்
முறைகேடு செய்ததாக அவர்
மீது புகார்கள் எழுந்தன.
மேலும்,
எழுதுபொருள்கள் கொள்முதல்
செய்ததிலும் இல்லாத
நிறுவனங்களின் பெயரில்
போலியாக ரசீதுகளை
தயாரித்து மோசடியில