Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: பங்குச்சந்தை

ஏற்றத்தில் நிப்டி! 10300 புள்ளிகளை எட்டும்!!

ஏற்றத்தில் நிப்டி! 10300 புள்ளிகளை எட்டும்!!

முக்கிய செய்திகள், வர்த்தகம்
இந்திய பங்குச்சந்தைகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி ஆகிய இரண்டிலுமே கடந்த வெள்ளியன்று (ஜூன் 19) ஏற்றத்துடன் வர்த்தகம் முடிந்திருப்பது, முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. கடந்த சில வாரங்களாகவே சென்செக்ஸ், நிப்டி இரண்டு சந்தைகளிலுமே சராசரியாக 3 சதவீதம் வரை வர்த்தகம் உயர்ந்துள்ளன. கொரோனா வைரஸின் இரண்டாம் கட்ட அலை காரணமாக கடந்த வாரம் உலகம் முழுவதுமே பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கின. இதுபோன்ற செய்திகளால் முதலீட்டாளர்களிடமும் அச்சம் தொற்றிக் கொள்கிறது. கடந்த வாரம், கொரோனா மற்றும் இந்தியா - சீனா நாடுகளிடையேயான பதற்றம் என இந்திய பங்குச்சந்தைகளை இரட்டை தாக்குதல் தாக்கியது. எனினும், சென்செக்ஸ் மற்றும் நிப்டி ஆகியவற்றில் கடந்த வாரத்தின் பிற்பகுதி தித்திப்புடன் வர்த்தகம் முடிந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.   இந
பங்குச்சந்தை: துள்ளிய கரடியை வீழ்த்திய காளை! கடந்த வார கடைசியில் நடந்தது என்ன?

பங்குச்சந்தை: துள்ளிய கரடியை வீழ்த்திய காளை! கடந்த வார கடைசியில் நடந்தது என்ன?

முக்கிய செய்திகள், வர்த்தகம்
இந்திய பங்குச்சந்தைகளில் கடந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளில், முதல் இரண்டு மணி நேரத்திற்கு கரடி ஆட்டம் காட்டி வந்த நிலையில், இரண்டாவது சுற்றில் காளையின் ஆட்டம் தொடங்கியது. பங்குச்சந்தைகள் ஓரளவு சரிவிலிருந்து மீண்டதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.   கரடியின் ஆட்டம்!:   கடந்த வியாழனன்று (ஜூன் 11), மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 33538 புள்ளிகளுடன் முடிவடைந்தது. சந்தை ஆய்வாளர்கள் முன்பே எச்சரித்தது போலவே வாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளியன்று (ஜூன் 12), ஆரம்பத்திலேயே சென்செக்ஸ் 32436 புள்ளிகளில்தான் துவங்கியது. அதாவது முந்தைய நாள் முடிவைக் காட்டிலும் இது 1102 புள்ளிகள் வீழ்ச்சி ஆகும்.   வர்த்தகம் தொடங்கிய முதல் இரண்டு மணி நேரத்தில் பெரிய முன்னேற்றம் இல்லாததால் முதலீட்டாளர்கள் உற்சாகம் இழந்தனர். எனினும், நீண்ட க
ஒரே நாளில் 34% விலை ஏறிய வோடபோன் ஐடியா பங்குகள்! கூகுள் பேச்சுவார்த்தை எதிரொலி!!

ஒரே நாளில் 34% விலை ஏறிய வோடபோன் ஐடியா பங்குகள்! கூகுள் பேச்சுவார்த்தை எதிரொலி!!

முக்கிய செய்திகள், வர்த்தகம்
கூகுள் நிறுவனம், வோடபோன் ஐடியா நிறுவனத்தில் கணிசமான பங்குகளை வாங்க உள்ளதாக பேச்சுகள் எழுந்ததை அடுத்து, மே மாத கடைசி வர்த்தக நாளில் இந்நிறுவனத்தின் பங்குகள் 34 சதவீதம் வரை அதிரடியாக உயர்ந்தது. இந்தியாவின் பெரும் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி, தன்னுடைய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் கணிசமான பங்குகளை அண்மையில் பேஸ்புக், சில்வர் லேக், விஸ்டா ஈக்விட்டி, ஜெனரல் அட்லாண்டிக் ஆகிய நிறுவனங்களுக்கு விற்றதன் மூலம் சுமார் 75 ஆயிரம் கோடி ரூபாயை திரட்டினார்.   பேஸ்புக் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மீது பார்வையைச் செலுத்திய நிலையில், உலகின் மற்றொரு டிஜிட்டல் ஜாம்பவனான கூகுள் நிறுவனமும், இந்திய தொலைதொடர்புத் துறையில் கால் பதிக்க ஆர்வம் காட்டுகிறது.   கூகுள் நிறுவனம், வோடபோன் ஐடியா நிறுவனத்திடம் இருந்து 5 சதவீத பங்குகளை வாங்க திட்டமிட்டு இரு
பங்குச்சந்தை: 3 நாள்களில் 10 லட்சம் கோடி ரூபாய் இழப்பு; முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

பங்குச்சந்தை: 3 நாள்களில் 10 லட்சம் கோடி ரூபாய் இழப்பு; முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், வர்த்தகம்
தொடர்ந்து மூன்றாவது நாளாக பங்குச்சந்தைகள் இன்றும் (பிப்ரவரி 6, 2018) சரிவுடன் தொடங்கின. கடந்த மூன்று நாள்களில் மட்டும் 9.61 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, பங்குச்சந்தையில் நீண்டகால முதலீட்டிற்கு வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அன்றைய தினம் கடும் சரிவுடன் பங்குச்சந்தைகள் முடிவு பெற்றன. இதன் தாக்கம் மறுநாளும் தொடர்ந்தது. 2ம் தேதியன்றும் பெரும் சரிவுடனேயே பங்குச்சந்தைகள் தொடங்கின. இந்நிலையில், உலகளவில் பங்குச்சந்தைகள் இன்றைக்கு எதிர்பாராத சரிவை சந்தித்தன. அமெரிக்கா டாலருக்கான தேவை அதிகரிப்பு, அந்நாட்டு பங்குச்சந்தையிலும் எதிரொலித்தன. 6 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்க பங்குச்சந்தையான டவ்ஜோன்ஸ் பெரும் சரிவுடன் இன்று தொடங்கியது. தைவான், ஜப்பான் நாடுகளிலும் பங்குச்சந்தைகள்
டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்திற்கு மூடுவிழா?

டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்திற்கு மூடுவிழா?

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தை மூடிவிடும் திட்டத்தில் இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. உப்பு முதல் சாப்ட்வேர் வரை 100க்கும் மேற்பட்ட தொழில்துறைகளைக் கொண்டது டாடா குழுமம். இந்தக் குழுமத்தின் டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ் உள்பட 29 நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ளன. தொலைத்தொடர்பு துறையில் ஏற்பட்டுள்ள கடும் போட்டி காரணமாக கடந்த சில ஆண்டாகவே டாடா டெலிசர்வீசஸ் (மஹாராஷ்டிரா) நிறுவனம் கடும் நெருக்கடியில் தவித்து வருகிறது. சுமார் 31 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையில் இருப்பதாக கூறப்படுகிறது. மறுகட்டமைப்புக்கு வாய்ப்பு இல்லாத நிலையில், 5000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் பேசி வருகிறது. இது தொடர்பாக டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது, ''டாடா