Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஏற்றத்தில் நிப்டி! 10300 புள்ளிகளை எட்டும்!!

இந்திய பங்குச்சந்தைகளான
சென்செக்ஸ் மற்றும் நிப்டி
ஆகிய இரண்டிலுமே கடந்த
வெள்ளியன்று (ஜூன் 19)
ஏற்றத்துடன் வர்த்தகம்
முடிந்திருப்பது,
முதலீட்டாளர்களிடம்
நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது.
கடந்த சில வாரங்களாகவே
சென்செக்ஸ், நிப்டி இரண்டு
சந்தைகளிலுமே சராசரியாக
3 சதவீதம் வரை வர்த்தகம்
உயர்ந்துள்ளன.

கொரோனா வைரஸின்
இரண்டாம் கட்ட அலை
காரணமாக கடந்த வாரம்
உலகம் முழுவதுமே
பங்குச்சந்தைகள் சரிவுடன்
தொடங்கின. இதுபோன்ற
செய்திகளால்
முதலீட்டாளர்களிடமும்
அச்சம் தொற்றிக் கொள்கிறது.
கடந்த வாரம், கொரோனா
மற்றும் இந்தியா – சீனா
நாடுகளிடையேயான பதற்றம்
என இந்திய பங்குச்சந்தைகளை
இரட்டை தாக்குதல் தாக்கியது.
எனினும், சென்செக்ஸ்
மற்றும் நிப்டி ஆகியவற்றில்
கடந்த வாரத்தின் பிற்பகுதி
தித்திப்புடன் வர்த்தகம்
முடிந்ததால் முதலீட்டாளர்கள்
மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

இந்தியா – சீனா நாடுகளிடையே எல்லைத் தகராறால் பதற்றம் இருந்து வந்தாலும், அடுத்தடுத்த நாள்களில் நிலைமை சீரடைந்து விடும் என்ற முதலீட்டாளர்களிடையேயான புரிதல்தான் இந்திய சந்தைகளை ஏற்றம் பெறச் செய்திருக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள்.

 

நிப்டியில் இன்று…:

 

கடந்த வெள்ளியன்று நிப்டி இண்டெக்ஸ் 10244 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. சந்தையில் நிலையற்றத் தன்மை காணப்படும் என்ற கருத்து நிலவுவதால், கடந்த வாரத்தின் கடைசி நாளைக் காட்டிலும் இன்று (ஜூன் 22) 10120 புள்ளிகளாக சரிவடையலாம். ஒருவேளை, மேல்நோக்கி வர்த்தகம் சென்றால், 10320 முதல் 10396 புள்ளிகள் வரை உயரலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 

கடந்த வார இறுதியில், நிப்டி வங்கி பங்குகள் 1.82 சதவீதம் உயர்ந்து 21338 புள்ளிகளில் நிறைவடைந்தன. இன்றும் வங்கி பங்குகள் ஏற்றம் காணும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், 21577 புள்ளிகள் முதல் 21817 புள்ளிகள் வரை வங்கி பங்குகள் உயரக்கூடும் என நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

 

ஆதாயம் அளிக்கும் பங்குகள்:

 

கடந்த வாரத்தின் இறுதியில்
சில குறிப்பிட்ட பங்குகள்
முதலீட்டாளர்களுக்கு கணிசமான
ஆதாயம் அளித்தன.
52 வார உச்ச விலையைக்
கடந்தும் வர்த்தகம் ஆனது.
அதனால் அவை மேலும்
விலை உயரக்கூடும் என்ற
சென்டிமென்ட்
முதலீட்டாளர்களிடம்
உள்ளது.

 

அதன்படி,
ஜிஎம்ஆர் இன்ப்ரா,
டிஎல்எப், ஜெய் கார்ப்,
பவர் கிரிட் கார்ப்பரேஷன்,
பிரமல் என்டர்பிரைசஸ்,
ரெயில் விகாஸ் நிகாம்,
ஹெச்டிஎப்சி லைப் இன்சூரன்ஸ்,
ஜம்ப் நெட்வொர்க்ஸ்,
மாருதி சுசூகி இண்டியா,
ஹிமாத்ரி ஸ்பெஷாலிட்டி,
சுவான் பார்சூட்டிகல்ஸ்,
இன்பிபீம் அவென்யூஸ்,
சுவான் லைப் சயின்சஸ்,
ஏபிபி இண்டியா,
கஜாரியா செராமிக்ஸ்,
ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ்,
பிலாடெக்ஸ் இண்டியா,
எஸ்ஜேவிஎன்,
பிர்லா கார்ப்பரேஷன்,
யுபிளெக்ஸ்,
ஆர்த்தி இண்டஸ்ட்ரீஸ்,
ரைட்ஸ், டிரெண்ட், என்ஐஐடி,
பில்டாலிகா லைப் ஸ்டைல்ஸ்,
எஸ்ஸால் புரோபேக்
ஆகிய பங்குகள் இந்த
வாரமும் ஏற்றம் காணும்
என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 

அதிக ஆர்வம் காட்டும் பங்குகள்:

 

முதலீட்டாளர்களிடையே
பின்வரும் பங்குகளை
வாங்கிக் குவிப்பதில்
பெரும் ஆர்வம் நிலவுகிறது.

 

சுவான் பார்மா, ஈஐடி பார்ரி,
ஆர்ஐஎல், லாரஸ் லேப்ஸ்
மற்றும்
ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ்
ஆகிய பங்குகளை நீண்டகால
முதலீட்டு அடிப்படையில்
வாங்கிப் போடுவதில்
முதலீட்டாளர்கள் அதிக
ஆர்வம் செலுத்துகின்றனர்.
மேலும், இப்பங்குகள்
கடந்த 52 வார உச்ச
விலையைக் கடந்தும்
வர்த்தகம் ஆகி வருகின்றன
என்பதும் கவனத்தில்
கொண்டுள்ளனர்.

 

அதேநேரம்,
கடந்த 52 வார காலத்தில்
குறைந்தபட்ச விலையைத்
தொட்டுள்ள ராஜேஷ்
எக்ஸ்போர்ட்ஸ், கண்ட்வாலா
செக்யூரிட்டீஸ், பி.சி. பவர்
கன்ட்ரோல்ஸ் ஆகிய பங்குகள்
பெரும் வீழ்ச்சி கண்டதால்
முதலீட்டாளர்கள் அதிகளவில்
விற்றுத் தள்ளுகின்றனர்.

 

காளையின் ஆதிக்கம்:

 

ஒட்டுமொத்த அளவில், நிப்டி நிலவரம் இந்த வாரமும் காளையின் ஆதிக்கத்தில்தான் இருக்கும் என்கிறார்கள் பங்குச்சந்தை ஆய்வாளர்கள். கடந்த வெள்ளியன்று, பிஎஸ்இ சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 500 நிறுவனங்களில் 334 பங்குகள் கணிசமான ஆதாயம் அளித்தன. இதுவும் முதலீட்டாளர்களின் உற்சாகத்திற்குக் காரணம் என்கிறார்கள் நிபுணர்கள்.

 

– ஷேர்கிங்