தடம் – விமர்சனம்! ‘ஓருரு இரட்டையர்களின் சடுகுடு ஆட்டம்!’
'தடையறத்தாக்க', 'மீகாமன்' வரிசையில்
இயக்குநர் மகிழ் திருமேனியிடம் இருந்து
வந்திருக்கும் மற்றுமொரு
சிறந்த படைப்பு, 'தடம்'.
அண்மைக்காலமாக நல்ல கதைகளை
தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்து
இருக்கிறார், அருண்விஜய்.
அந்த பட்டியலில் அவரின்
ஆகச்சிறந்த படங்களுள் 'தடம்'
படத்திற்கு முக்கிய இடம் உண்டு.
நடிகர்கள்:
அருண்விஜய்
தன்யா ஹோப்
ஸ்மிருதி
வித்யா பிரதீப்
யோகிபாபு
பெப்சி விஜயன்
மீரா கிருஷ்ணன்
மற்றும் பலர்
தொழில்நுட்ப கலைஞர்கள்:
ஒளிப்பதிவு: கோபிநாத்; இசை: அருண் ராஜ்; எடிட்டிங்: ஸ்ரீகாந்த்
இயக்கம்: மகிழ் திருமேனி
கதையின் 'ஒன்லைன்': ஓருரு இரட்டையர்கள் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு காவல்துறையினரின் சித்திரவதைக்கு உள்ளாகின்றனர். அந்தக் கொலை வழக்கில் இருந்து சட்ட ரீதியாக விடுதலை செய்யப்படுகின்றனர். சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வைத்து அவர்கள் எப்படி தப்பினார்கள் என