Sunday, October 6மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி

சேலம்: எடுபடாத கிராம சபைக்கூட்டம்! விவசாயிகள் அதிருப்தி!! #GramaSabha

சேலம்: எடுபடாத கிராம சபைக்கூட்டம்! விவசாயிகள் அதிருப்தி!! #GramaSabha

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலம் மாவட்டத்தில் கண்துடைப்பாக கிராம சபைக்கூட்டங்கள் நடத்தப்படுவது அம்பலமாகி உள்ளது. இதனால் கிராம மக்கள், விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.   கிராம சபைக்கூட்டம்   இந்தியா 70 சதவீதம் கிராமங்களையும், விவசாயத்தை பிரதானத் தொழிலாகவும் கொண்ட நாடு. நகர்ப்புறத்தில் கிடைக்கும் அத்தனை வசதிகளும் கிராமப்புறங்களிலும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆண்டுக்கு நான்கு முறை கட்டாயமாக ஒவ்வொரு கிராமத்திலும் கிராமசபைக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்பது சட்டமாகக் கொண்டு வரப்பட்டது.   அதன்படி நாடு முழுவதும் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய நான்கு தினங்களில் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறும்.   385 கிராமங்களில்...   தமிழகம் முழுவதும் கடந்த அதன்படி அக்டோபர் 2, 2018)ம் தேதியன்று 12618 கிராமங்களிலும் இக்கூட்டம் நடத்தப்பட்டது. சேலம் மாவ
ஆசிரியர், மாணவிகள் உள்ளம் கவர்ந்த ஆட்சியர் ரோகிணி! காலில் விழுந்து வணங்கினார்… கேக் ஊட்டினார்… கைகுலுக்கினார்…! #CollectorRohini

ஆசிரியர், மாணவிகள் உள்ளம் கவர்ந்த ஆட்சியர் ரோகிணி! காலில் விழுந்து வணங்கினார்… கேக் ஊட்டினார்… கைகுலுக்கினார்…! #CollectorRohini

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  ஆசிரியர்கள் தினத்தன்று ஒட்டுமொத்த மாணவிகள், ஆசிரியர்களின் உள்ளங்களையும் கவர்ந்து சென்றார் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி.   கடந்த ஆண்டு, ஊதிய உயர்வு கேட்டு ஜாக்டோ-ஜியோ அமைப்புடன் இணைந்து ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, ஆத்தூரில் அலுவல் நிமித்தம் சுற்றுப்பயணம் சென்றிருந்தார் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி. கருமத்தம்பாளையம் அரசுப்பள்ளியில் ஆசிரியர்கள் யாருமே இல்லாத நிலையில், குழந்தைகள் கரும்பலகையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்தத் தருணத்தில் என்ன நினைத்தாரோ ரோகிணி, உடனடியாக வகுப்பறைக்குள் சென்று குழந்தைகளுக்கு பாடம் நடத்த ஆரம்பித்து விட்டார். மற்றொரு நாள், அய்யந்திருமாளிகையில் அன்னை சத்யா பெண் குழந்தைகள் காப்பக வளாகத்தில் செயல்படும் பள்ளியிலும் அதிரடியாக ஆய்வு செய்து, குழந்தைகளுடன் வாஞ்சையுடன் கொஞ்சி மகிழ்ந்தார். இன்னொரு நாள் அரசுப்பள
எட்டுவழிச்சாலையும் எடப்பாடி பழனிசாமியும்…  மீம்ஸ்களால் தோரணம் கட்டும் இணையவாசிகள்!

எட்டுவழிச்சாலையும் எடப்பாடி பழனிசாமியும்… மீம்ஸ்களால் தோரணம் கட்டும் இணையவாசிகள்!

சிறப்பு கட்டுரைகள், சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சென்னை - சேலம் இடையிலான எட்டுவழி பசுமைச்சாலைத் திட்டத்தை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ஆகியோரை கேலி, கிண்டல் செய்து சமூகவலைத்தளங்களில்  வெளியிடப்பட்டுள்ள மீம்ஸ்கள் ரொம்பவே வைரல் ஆகி வருகின்றனர்.   சென்னை - சேலம் இடையே எட்டுவழி பசுமைச்சாலைத் திட்டம், 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்கள் வழியாக இந்த சாலை அமைகிறது. இதற்காக 2343 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதில், 90 சதவீத நிலம், விளை நிலங்கள் ஆகும்.     இத்திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியதில் இருந்தே விவசாயிகள், பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, விவசாயிகள் தானாகவே முன்வ
நியாயமாரே…!; இதற்குத்தானா எட்டு வழிச்சாலை?

நியாயமாரே…!; இதற்குத்தானா எட்டு வழிச்சாலை?

அரசியல், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
  எட்டு வழிச்சாலைக்கு நிலம் கொடுக்கும் விவசாயிகளின் குழந்தைகளுக்கு ஜவுளிக்கடை, பால் நிறுவனத்தில் சொற்ப ஊதியத்தில் வேலை வாங்கித் தருவதாக அதிகாரிகள் மூலம் ஆசை வார்த்தை கூறி வருகிறது சேலம் மாவட்ட நிர்வாகம். கொத்தடிமை வேலையில் சேர்வதற்காகவா எங்கள் பிள்ளைகளை பட்டப்படிப்பு படிக்க வைத்தோம்? என்று விவசாயிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். சென்னை - சேலம் இடையிலான பசுமைவழி விரைவுச்சாலை திட்டம் குறித்த அறிவிப்பு வந்த நாள் முதலே முதல்வரின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்ட விவசாயிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.   பாரத்மாலா பரியோஜனா என்ற பெயரில் அமைக்கப்பட உள்ள பசுமைவழி விரைவுச்சாலைக்காக, சேலம் மாவட்டத்தில் 248 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இந்த மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 36.3 கி.மீ. தூரத்திற்கு சாலை அமைகிறது. இந்த சாலை 70 மீட்டர் அகலத்தில் 8 வழிச்சாலையாக விர