3-வது ஒருநாள்: சுழல் பந்து வீச்சுக்கு இரையானது தென்னாப்பிரிக்கா; இந்தியா ஹாட்ரிக் வெற்றி
கேப்டவுனில் நடந்த தென்னாப்பிரிக்கா உடனான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், விராட் கோலியின் அசத்தலான சதம் மற்றும் சுழல் பந்து வீச்சாளர்கள் தாக்குதலால் இந்தியா 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், கேப்டன் விராட் கோலி ஆகியோர் அரை சதம் கடந்தனர்.
இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுன் நகரில் நேற்று (பிப்ரவரி 7, 2018) நடந்தது. இதில் 'டாஸ்' வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் எய்டன் மார்க்ரம் பவுலிங்கை தேர்வு செய்தார்.
ஆறு போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் வென்றுள்ளதால், இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை.
அதேசமயம், தென்னாப்பிரிக்க அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.