சேலம் கல்லூரி மாணவர் கொலை! அதிமுக எம்எல்ஏவிடம் தஞ்சம் அடைந்த கூலிப்படை! கூடா நட்பு கேடாய் முடிந்த பின்னணி!!
சேலம் அருகே,
கல்லூரி மாணவர்
படுகொலை செய்யப்பட்ட
சம்பவத்திற்கு பழிதீர்க்கும்
விதமாக அடுத்தடுத்து
மேலும் சில
அசம்பாவிதங்கள்
நிகழக்கூடும் என்ற
தகவலால் ஒரு
கிராமமே திகிலடைந்து
கிடக்கிறது.
சேலம் சீலநாய்க்கன்பட்டி அருகே உள்ள நாழிக்கல்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி வசந்தி. கூலித்தொழிலாளிகளான இவர்களின் ஒரே மகன் திலீப்குமார் (19). நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் இறுதியாண்டு படித்து வந்தார். செப்., 5ம் தேதியன்று இரவு 7 மணியளவில் தன் நண்பர்களைச் சந்தித்துவிட்டு வருவதாக அம்மாவிடம் சொல்லிவிட்டு வீட்டில் இருந்து 20 அடி தூரம் நடந்து சென்ற அவரை வழிமறித்த ஒரு கும்பல் கொடூரமாக குத்திக் கொன்றிருக்கிறது.
மகனை யாரோ சிலர் மிரட்டியபடியே, 'அவன இங்கேயே போட்டுத்தள்ளுங்கடா...' என்றுகூற, வீட்டில் இருந்து...