‘வாட்ஸ் அப்’ பயனர்களை அசத்த வருகிறது புதிய வசதி!
வாட்ஸ் அப் சாட்டில், குழு அழைப்பு (குரூப் காலிங்) வசதியை அறிமுகப்படுத்திய அந்நிறுவனம் தற்போது அதில் இன்னும் மேம்படுத்தப்பட்ட வசதியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
சமூக வலைத்தளங்களின்றி அமையாது உலகு என்ற ரீதியில், உலகம் முழுவதும் உடனுக்குடன் தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. அதிலும் குறிப்பாக, வாட்ஸ் அப் செயலியை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
வாட்ஸ் அப் செயலி நாளுக்கு நாள் புதிய புதிய அப்டேட்டுகளால் அனைவரையும் கவர்ந்து வருகிறது. ஸ்மார்ட் ஃபோன்களை வைத்திருப்பவர்களில் வாட்ஸ் அப் செயலி இல்லாத ஒருவரை, இன்றைய தொழில்நுட்ப உலகில் பார்ப்பது கடினம் என்று சொல்லிவிடலாம். அறிவியல் முன்னேற்றங்கள், புதிய கண்டுபிடிப்புகள் மனிதர்களை தொழில் நுட்பத்திற்கு அடிமையாக மாற்றி வருகிறது.
வாட்ஸ் அப் செயலி மூலமாக, மெசேஜ், ஃபோட்டோ, வீடியோ, வாய்ஸ் கால்ஸ், வீடியோ கால் என எந...