Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பணமதிப்பிழப்பு காலத்தில் சொத்துகளை வாங்கி குவித்த சசிகலா! 

பணமதிப்பிழப்பு
செய்யப்பட்ட காலத்தில்,
ஜெயலலிதான் தோழி
சசிகலா, 1674.5 கோடிக்கு
சொத்துகளை வாங்கி
குவித்துள்ளதை
வருமானவரித்துறை
கண்டுபிடித்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு
நவம்பர் 8ம் தேதி இரவு,
இந்தியாவில் அதுவரை
புழக்கத்தில் இருந்த 500
மற்றும் 1000 ரூபாய் தாள்கள்
செல்லாது என்று பிரதமர்
நரேந்திர மோடி திடீரென்று
அறிவித்தார்.

 

கருப்புப்பணத்தை ஒழிப்பது,
தீவிரவாதிகளுக்கு பணம்
கைமாறுவதை தடுப்பது,
ஊழலை ஒழிப்பது ஆகியவற்றை
நோக்கமாகக் கொண்டு
பணமதிப்பிழப்பு நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக
அப்போது அவர் சொன்னார்.

 

பிறகு, 2017 ஜனவரி மாதம்
முதல் புதிதாக 500 ரூபாய்
மற்றும் 2000 ரூபாய்
தாள்களை அச்சிட்டு
புழக்கத்திற்கு கொண்டு வந்தனர்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை
என்பது மாபெரும் முட்டாள்தனம்
என்று பாஜகவினரைத் தவிர
உலகின் எல்லா பொருளாதார
வல்லுநர்களும் சொல்லி விட்டனர்.
அவர்கள் கூறிய மூன்று
நோக்கமும் பணமதிப்பிழப்பால்
நிறைவேறவில்லை என்பது
வேறு சங்கதி. மேலும்,
மீண்டும் கருப்புப்பணமும்,
கள்ள நோட்டு அச்சடிப்பு
குற்றங்களும் பெருமளவு
அதிகரித்திருக்கிறது.

 

இது ஒருபுறம் இருக்க,
பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட
காலத்தில், ஜெயலலிதாவின்
தோழியான சசிகலா,
அவசர அவசரமாக
1674.50 கோடி ரூபாய்க்கு
ஏகப்பட்ட சொத்துகளை
வாங்கி போட்டுள்ளது
வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 

பணமதிப்பிழப்பு அமலில்
இருந்த 2016 நவம்பர்
8ம் தேதி முதல்
டிசம்பர் 30ம் தேதி
வரையிலான காலக்கட்டத்தில்
சசிகலாவும், அவருக்கு
சொத்துகளை விற்ற
நபர்களும், வங்கிகளில்
பல போலியான
கணக்குகளின் பெயர்களில்
மதிப்பிழப்பு செய்யப்பட்ட
பணத்தை டெபாசிட்
செய்திருப்பதும்
தெரிய வந்துள்ளது.

 

மதிப்பிழக்கம் செய்யப்பட்ட
பணத்தின் மூலம் சசிகலா,
ரிசார்ட், இரண்டு
வணிக வளாகங்கள்,
ஒரு சாப்ட்வேர் நிறுவனம்,
ஒரு சர்க்கரை ஆலை,
ஒரு காகித ஆலை
மற்றும் 50 காற்றாலைகளை
வாங்கிப் போட்டிருக்கிறார்.

 

புதுச்சேரியில்
நவீன் பாலாஜி என்பவருக்குச்
சொந்தமான ஓஷன் ஸ்பிரே
ரிசார்ட்டை, 168 கோடி
ரூபாய்க்கு சசிகலா தரப்பு
வாங்கியிருக்கிறது.
இதில், 148 கோடி ரூபாய்,
மதிப்பிழக்கம் செய்யப்பட்ட
500, 1000 ரூபாய் தாள்களாக
கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்தத் தொகையை சசி தரப்பு,
மூன்று டாடா ஏஸ்
வாகனங்களில் எடுத்துச்
சென்று கொடுத்துள்ளனர்.

 

இதுபோக,
பல வங்கிகளில் பல்வேறு
தனி நபர்களின் பெயர்களில்
டெபாசிட் செய்யப்பட்டிருந்த
97 கோடி ரூபாயையும் சசி தரப்பு
கைமாற்றி இருப்பதும்
தெரியவந்துள்ளது.

 

மேலும், சசிகலா தரப்புக்கு
சொத்துகளை விற்ற வகையில்,
அவர் சார்பில் 7 தனி நபர்களின்
வங்கிக் கணக்குகள்
மூலமாகவும் மார்க்
ரியாலிட்டீஸ் நிறுவன
இயக்குநர் ராமகிருஷ்ண ரெட்டி
என்பவருக்கு 6 கோடி ரூபாய்
கொடுக்கப்பட்டுள்ளது.

 

வருமானத்திற்கு அதிகமாக
சொத்து சேர்த்த வழக்கில்
நான்கு ஆண்டுகள்
சிறைத்தண்டனை பெற்ற சசிகலா,
தற்போது பெங்களூரு
மத்திய சிறையில்
அடைக்கப்பட்டு உள்ளார்.

 

இது தொடர்பாக
வருமானவரித்துறை
சசிகலாவுக்கு நோட்டீஸ்
அளித்துள்ளது. சசிகலாவின்
இந்த தகிடுதத்தம் எப்படி
வெளியே கசிந்தது என்பது
குறித்த தகவல்களும்
வெளியாகி இருக்கிறது.

 

கடந்த 2017ம் ஆண்டு
சசிகலா, அவருடைய
அண்ணன் மகள் கிருஷ்ணபிரியா,
டிடிவி தினகரன் ஆகியோருடைய
வீடுகள், பண்ணை வீடுகள்,
அலுவலகங்களில் வருமான
வரித்துறை சோதனை நடந்தது.

 

அப்போது கிருஷ்ணபிரியாவின்
செல்போனில் இருந்து,
சசிகலா தரப்பு
பணமதிப்பிழப்பின்போது
வாங்கிய சொத்துகள்
தொடர்பாக சில
ஆவணங்களின் படங்கள்
சிக்கியிருக்கிறது. அதை
வைத்துதான் இப்போது
வருமான வரித்துறையினர்
சசிகலா மீதான
நடவடிக்கையை தீவிரப்படுத்தி
இருப்பதாகச்
சொல்லப்படுகிறது.

 

– பேனாக்காரன்