Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஊரடங்கில் தளர்வு; சேலத்தில் இன்று முதல் தேநீர், தள்ளுவண்டி கடைகளுக்கும் அனுமதி!

கொரோனா பரவல்
காரணமாக ஒன்றரை
மாதங்களாக அமலில்
இருந்த ஊரடங்கு
கட்டுப்பாடுகள் மெல்ல
மெல்ல தளர்த்தப்பட்டு
வருகிறது. சேலம்
மாவட்டத்தில் இன்று முதல்
(மே 11) சாலையோர
தள்ளுவண்டிக் கடைகள்
உள்பட பல்வேறு
தனிநபர் கடைகளுக்கும்
நிபந்தனைகளுடன் கூடிய
அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

சேலம் மாவட்ட
ஆட்சியர் உத்தரவின்படி,
சேலம் மாவட்டத்தில்
பின்வரும் கடைகளை
இன்றுமுதல் (மே 11)
குறிப்பிட்ட நேரத்தில்
திறக்க அனுமதிக்கப்படுகிறது.
அதன் விவரம்:

 

1. தேநீர் கடைகள் (பார்சல் மட்டும்)

2. பேக்கரி கடைகள் (பார்சல் மட்டும்)

3. உணவகங்கள் (பார்சல் மட்டும்)

4. பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள்

5. கட்டுமானப் பொருள்கள் விற்கும் கடைகள்

6. சிமெண்ட், ஹார்டுவேர், சானிடரிவேர் விற்கும் கடைகள்

7. மின்சாதனப் பொருள்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்

8. மொபைல் போன் விற்கும் கடைகள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்

9. கணினி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள்

10. வீட்டு உபயோக இயந்திரங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் விற்கும் கடைகள்

11. மோட்டார் இயந்திரங்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்

12. கண் கண்ணாடி மற்றும் பழுது நீக்கும் கடைகள்

13. சிறிய நகைக்கடைகள் (ஏசி வசதி இல்லாதவை)

14. சிறிய ஜவுளிக்கடைகள் (ஏசி வசதி இல்லாதவை) (ஊரக பகுதிகளில் மட்டும்)

15. மிக்ஸி, கிரைண்டர் பழுது நீக்கும் கடைகள்

16. டிவி விற்பனை மற்றும் டிவி பழுது நீக்கும் கடைகள்

17. பெட்டிக்கடைகள்

18. பர்னிச்சர் கடைகள்

19. சாலையோர தள்ளுவண்டிக் கடைகள்

20. உலர் சலவையகங்கள்

21. கூரியர் மற்றும் பார்சல் சர்வீஸ்

22. லாரி புக்கிங் சேவைகள்

23. ஜெராக்ஸ் கடைகள்

24. இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகன விற்பனை நிலையங்கள்

25. இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகன பழுது நீக்கும் பட்டறைகள்

26. நாட்டு மருந்து விற்பனை கடைகள்

27. விவசாய இடுபொருள்கள் மற்றும் பூச்சி மருந்து விற்பனை கடைகள்

28. டைல்ஸ் கடைகள்

29. பெயிண்ட் கடைகள்

30. எலக்ட்ரிகல் கடைகள்

31. ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் விற்பனை கடைகள்

32. நர்சரி கார்டன்கள்

33. மரக்டைகள் மற்றும் பிளைவுட் கடைகள்

34. மரம் அறுக்கும் கடைகள் (சா மில்)

 

மேற்கண்ட 34 வகையான கடைகள், அலுவலகங்கள், தனிநபர் கடைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. எனினும், முடி திருத்தும் நிலையங்கள், அழகு நிலையங்கள் இயங்க அனுமதி இல்லை.

 

காய்கறிகள், மளிகை பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படலாம். பிற தனிக்கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.

 

சேலம் மாவட்டத்தில் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர அனைத்துப் பகுதிகளிலும் உள்ள தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

 

தேநீர் கடைகளில், இதுநாள் வரை பின்பற்றி வந்த ஒவ்வொரு நபருக்குமான குறைந்தபட்சம் 3 அடி சமூக இடைவெளியைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். மேலும், தினமும் 5 முறை கிருமிநாசினி தெளித்து, கடையை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

 

தேநீர் கடைகளில் வாடிக்கையாளர்கள் நின்றோ, அமர்ந்தோ அருந்த அனுமதி இல்லை. இதை முறையாக கடைப்பிடிக்க தவறும் தேநீர் கடைகள் உடனடியாக மூடப்படும்.

 

சேலம் மாவட்டத்தில் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பெட்ரோல் பங்க்குகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படலாம். தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்க்குகள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது.

 

அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படலாம்.

 

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளபடி, மேற்குறிப்பிட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் கடைகளில் தனிநபர் இடைவெளியை பின்பற்றி, சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். போதுமான கிருமிநாசினிகளை பயன்படுத்துவதோடு, பணியாளர்கள், தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணியாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அந்தந்த நிறுவனங்கள் மற்றும் கடைகளின் உரிமையாளர்களே மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

 

மேலும், தமிழக அரசால் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அனைத்துத் தளர்வுகளும், தடைகளும் மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் முழுமையாக கடைப்பிடிக்கப்படும்.

 

சேலம் மாவட்டத்தில்
நோய்க்கட்டுப்பாட்டு
பகுதிகளாக
அறிவிக்கப்பட்டுள்ள
சேலம் மாநகராட்சிக்கு
உட்பட்ட கிச்சிப்பாளையம்
34வது வார்டு,
குகை 46வது வார்டு,
தாதகாப்பட்டி 58வது
வார்டு ஆகிய மூன்று
பகுதிகளிலும்,
மேட்டூர் நகராட்சியில்
7வது வார்டுக்கு உட்பட்ட
பகுதிகள், தலைவாசல்
ஒன்றியத்திற்கு உட்பட்ட
நவக்குறிச்சி,
பெத்தநாயக்கன்பாளையம்
அருகே உள்ள கருமந்துறை
வடக்கநாடு, ஓமலூர்
அருகே உள்ள
கோட்டகவுண்டம்பட்டி,
கெங்கவல்லி அருகே உள்ள
ஓலைப்பட்டி ஆகிய
ஆறு நோய்க்கட்டுப்பாட்டு
பகுதிகளிலும் எவ்வித
கடைகளோ, நிறுவனங்களோ
இயங்க அனுமதி இல்லை.

 

இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.