Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: curfew

கொரோனா தொற்று அதிகரிப்பு; இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்!

கொரோனா தொற்று அதிகரிப்பு; இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்!

தமிழ்நாடு
கொரோனா நோய்த்தொற்றைத் தடுக்க, ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் இன்று (ஆக. 9) முதல் கூடுதலாக்கப்பட்டு உள்ளது. சேலம் மாவட்டத்தில் மாலை 6 மணி வரை மட்டுமே ஜவுளிக்கடைகள், வணிக வளாகங்கள், பேரங்காடிகள் செயல்பட அனுமதித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு ஆக. 23ம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், நோய்த்தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ள இடங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே சூழ்நிலைக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை அதிமாக்கிக் கொள்ளவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது. கேரளா மாநிலத்தில் கொரோனோ நோய்த்தொற்று சரிந்திருந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக மேலும் கணிசமாக அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதையடுத்து எல்லையோர மாவட்டங்களான கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில
கொரோனா பரவல் அதிகரிப்பு: தமிழகத்தில் ஏப். 20 முதல் இரவு நேர ஊரடங்கு; ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமுடக்கம்!

கொரோனா பரவல் அதிகரிப்பு: தமிழகத்தில் ஏப். 20 முதல் இரவு நேர ஊரடங்கு; ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமுடக்கம்!

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், வரும் ஏப். 20ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவை அரசு அமல்படுத்தி உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமுடக்கமும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 500க்கும் கீழே குறைந்த நிலையில், சட்டமன்ற தேர்தல் காலத்தில் மீண்டும் தொற்றின் வேகம் முன்பை விட அதிகரித்தது. பொதுமக்கள் முகக்கவசம் அணியாதது, சமூக இடைவெளியை பின்பற்றாதது, கட்டுப்பாடின்றி பொது இடங்களில் கூட்டம் கூட்டமாக கூடியது உள்ளிட்ட காரணங்களால் கொரோனா இரண்டாவது அலையின் பரவல் வேகமெடுத்துள்ளது. கடந்த சில நாள்களாக தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்றின் தாக்கம் 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இது, தமிழக அரசை அதிர்ச்சி
ஊரடங்கினால் சீரழிக்கப்பட்ட 2 சிறுமிகள்; 75 வயது முதியவர் முதல் பள்ளி மாணவர் வரை 12 பேர் கும்பல் வெறியாட்டம்!

ஊரடங்கினால் சீரழிக்கப்பட்ட 2 சிறுமிகள்; 75 வயது முதியவர் முதல் பள்ளி மாணவர் வரை 12 பேர் கும்பல் வெறியாட்டம்!

குற்றம், நாமக்கல், முக்கிய செய்திகள்
நாமக்கல் அருகே, ஓலை குடிசையில் வசித்து வரும் இரண்டு சிறுமிகளை 75 வயது முதியவர் முதல் பிளஸ்-2 மாணவர் வரை 11 பேர் கும்பல் கடந்த ஆறு மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ள சம்பவம், முட்டை மாவட்டத்தை உலுக்கி எடுத்துள்ளது.   நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வாம்பாள். இவருடைய கணவர், மூட்டைத் தூக்கும் தொழிலாளி. இரு ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பால் இறந்து விட்டார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த செல்வாம்பாளுக்கு மூன்று மகள்கள்; இரண்டு மகன்கள். மூத்த மகள் திருமணம் ஆகி, வெளியூரில் குடும்பத்துடன் வசிக்கிறார். மற்ற இரு மகள்களில் ஒருவர் ரேகா (13); இன்னொரு மகள் ரஞ்சனி (12). (தாயார் மற்றும் மகள்களின் பெயர்கள் மாற்றப்பட்டு உள்ளன). செல்வாம்பாள், மல்லூரில் உள்ள தனியார் சேகோ ஆலையில் கூலி வேலை செய்கிறார். தினசரி
ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு! மதுக்கடைகளுக்கு அனுமதி; பள்ளிகளுக்கு தடை; தனியார் நிறுவனங்கள் முழுமையாக இயங்கலாம்!!

ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு! மதுக்கடைகளுக்கு அனுமதி; பள்ளிகளுக்கு தடை; தனியார் நிறுவனங்கள் முழுமையாக இயங்கலாம்!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கொரோனா நோய் பரவல் அபாயம் காரணமாக, தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், தற்போது ஆறாவது முறையாக ஊரடங்கு உத்தரவை ஜூலை 1ம் தேதி முதல் 31.7.2020ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டித்து தமிழக அரசு திங்களன்று (ஜூன் 29) உத்தரவிட்டுள்ளது.   ஜூலை மாதத்தில் 5, 12, 19, 26 ஆகிய நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும். அதன் விவரம்:   நகர்ப்புற வழிபாட்டுத் தலங்கள், பெரிய வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபாடுகள், அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை நீடிக்கிறது.   நீலகிரி மாவட்டத்திற்கும், கொ
ஊரடங்கில் தளர்வு; சேலத்தில் இன்று முதல் தேநீர், தள்ளுவண்டி கடைகளுக்கும் அனுமதி!

ஊரடங்கில் தளர்வு; சேலத்தில் இன்று முதல் தேநீர், தள்ளுவண்டி கடைகளுக்கும் அனுமதி!

தமிழ்நாடு
கொரோனா பரவல் காரணமாக ஒன்றரை மாதங்களாக அமலில் இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் இன்று முதல் (மே 11) சாலையோர தள்ளுவண்டிக் கடைகள் உள்பட பல்வேறு தனிநபர் கடைகளுக்கும் நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.   சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, சேலம் மாவட்டத்தில் பின்வரும் கடைகளை இன்றுமுதல் (மே 11) குறிப்பிட்ட நேரத்தில் திறக்க அனுமதிக்கப்படுகிறது. அதன் விவரம்:   1. தேநீர் கடைகள் (பார்சல் மட்டும்) 2. பேக்கரி கடைகள் (பார்சல் மட்டும்) 3. உணவகங்கள் (பார்சல் மட்டும்) 4. பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள் 5. கட்டுமானப் பொருள்கள் விற்கும் கடைகள் 6. சிமெண்ட், ஹார்டுவேர், சானிடரிவேர் விற்கும் கடைகள் 7. மின்சாதனப் பொருள்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள் 8. மொபைல்
ஊரடங்கு: கடும் உளவியல் சிக்கலில் பெண்கள்!

ஊரடங்கு: கடும் உளவியல் சிக்கலில் பெண்கள்!

உலகம், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
கொரோனா வைரஸ், உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. கடந்த மூன்று மாதங்களாக உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் இந்த வைரஸ் எங்கிருந்து, எதிலிருந்து பரவியது என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனாவுக்கு தடுப்பு மருந்துகளும் ஆராய்ச்சி அளவிலேயே இருக்கின்றன.   இன்றைய நிலையில், 211 நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளதாக சொல்கிறது உலக சுகாதார நிறுவனம். 2020 ஏப்ரல் 7ம் தேதி நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 12 லட்சத்து 14466 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 67 ஆயிரத்து 767 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலி, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் பெரும் இழப்பைச் சந்தித்து வருகின்றன. கொரோனா தாக்குதலில் இந்தியாவும் தப்பவில்லை. இங்கும் ஏப். 7ம் தேதி வரை 4281 பேருக்கு இத்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை, கொரோனாவால்
கொரோனா: வங்கிகள் கடன் வசூலிக்க தடை!

கொரோனா: வங்கிகள் கடன் வசூலிக்க தடை!

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மறு உத்தரவு வரும் வரை வங்கிகள், நிதி நிறுவனங்கள், சுய உதவிக்குழு நிறுவனங்கள் உறுப்பினர்கள், வாடிக்கையாளர்களிடம் இருந்து கடன் அசல், வட்டி வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.   கோரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. இதற்கென பொது மக்களின் நன்மை கருதி, குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் படி, ஊரடங்கு உத்தரவு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது. இந்த உத்தரவுகளை அனைத்து மாவட்டங்களிலும் முறையாக நடைமுறைப்படுத்திட உத்தரவுகள் வழங்கப்பட்டன. இதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் ஆகிய