Tuesday, April 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: corona virus

ஏற்றத்தில் நிப்டி! 10300 புள்ளிகளை எட்டும்!!

ஏற்றத்தில் நிப்டி! 10300 புள்ளிகளை எட்டும்!!

முக்கிய செய்திகள், வர்த்தகம்
இந்திய பங்குச்சந்தைகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி ஆகிய இரண்டிலுமே கடந்த வெள்ளியன்று (ஜூன் 19) ஏற்றத்துடன் வர்த்தகம் முடிந்திருப்பது, முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. கடந்த சில வாரங்களாகவே சென்செக்ஸ், நிப்டி இரண்டு சந்தைகளிலுமே சராசரியாக 3 சதவீதம் வரை வர்த்தகம் உயர்ந்துள்ளன. கொரோனா வைரஸின் இரண்டாம் கட்ட அலை காரணமாக கடந்த வாரம் உலகம் முழுவதுமே பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கின. இதுபோன்ற செய்திகளால் முதலீட்டாளர்களிடமும் அச்சம் தொற்றிக் கொள்கிறது. கடந்த வாரம், கொரோனா மற்றும் இந்தியா - சீனா நாடுகளிடையேயான பதற்றம் என இந்திய பங்குச்சந்தைகளை இரட்டை தாக்குதல் தாக்கியது. எனினும், சென்செக்ஸ் மற்றும் நிப்டி ஆகியவற்றில் கடந்த வாரத்தின் பிற்பகுதி தித்திப்புடன் வர்த்தகம் முடிந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.   இந
எங்கே போயினர் கடவுளர்கள்?

எங்கே போயினர் கடவுளர்கள்?

சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
வெறும் கண்களுக்குப் புலனாகாத கொரோனா வைரஸ், நமக்கு எதைக் கற்றுக் கொடுத்திருக்கிறதோ இல்லையோ... யார் கடவுள்? எதுவெல்லாம் கடவுள் தன்மை? என்பதை நன்றாகவே அடையாளம் காட்டியிருக்கிறது. கொடுத்த விலை சற்றே அதிகமெனினும், மானுட குலம் வாழும் வரை நெஞ்சில் பதிய வைத்திருக்கிறது இந்த வைரஸ். மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங் அடிக்கடி சொல்வார்: இந்த பூமியில் மனிதர்கள் வாழ்வதற்கான சூழல் அருகி வருகிறது. விரைவில் சந்திரனிலோ, செவ்வாயிலோ அல்லது வேறு கிரகங்களிலோ மனிதர்கள் வாழும் சூழல் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்பார். அறிவியல் முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆனாலும், கொரோனா வைரஸ் தோன்றிய இடமும் தெரியவில்லை; பரவிய தடமும் கண்டறியப்படவில்லை. மே 8 வரை உலகம் முழுவதும் 2.73 லட்சம் பேரை பலி வாங்கியிருக்கிறது கொரோனா.   நோய்த்தொற்றைத் தடுக்க இதுவரை யாதொரு தடுப்பு மருந்துகளு
சேலம்: மாஸ்க் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம்! இன்று முதல் அமல்!!

சேலம்: மாஸ்க் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம்! இன்று முதல் அமல்!!

சேலம், முக்கிய செய்திகள்
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பொது இடங்களில் நடமாடுவோர் கண்டிப்பாக முகக்கவசம் (மாஸ்க்) அணியவேண்டும் என்றும், இல்லாவிட்டால் அந்த இடத்திலேயே 500 ரூபாய் உடனடி அபராதம் விதிக்கப்படும் என்றும் சேலம் மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த புதிய உத்தரவு, வியாழன் (ஏப். 16) முதல் அமலுக்கு வருகிறது.   கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் ஒருபுறம் தீவிரமாக நடந்து வந்தாலும், இப்போதைக்கு தனிமைப்படுத்தலும், சமூக விலகல் மூலம் மட்டுமே வைரஸ் பரவலில் இருந்து ஓரளவு தற்காத்துக் கொள்ள முடியும் என்ற நிலை உள்ளது. இதற்காகவே நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக ஏப்ரல் 14 மாலை வரை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, தற்போது மே 3ம் தேதி வரை இரண்டாம் கட்டமாக நீட்டிக்கப்பட்டு உள்ளது.   சேலம் மாவட்டத
ஊரடங்கு: கடும் உளவியல் சிக்கலில் பெண்கள்!

ஊரடங்கு: கடும் உளவியல் சிக்கலில் பெண்கள்!

உலகம், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
கொரோனா வைரஸ், உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. கடந்த மூன்று மாதங்களாக உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் இந்த வைரஸ் எங்கிருந்து, எதிலிருந்து பரவியது என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனாவுக்கு தடுப்பு மருந்துகளும் ஆராய்ச்சி அளவிலேயே இருக்கின்றன.   இன்றைய நிலையில், 211 நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளதாக சொல்கிறது உலக சுகாதார நிறுவனம். 2020 ஏப்ரல் 7ம் தேதி நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 12 லட்சத்து 14466 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 67 ஆயிரத்து 767 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலி, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் பெரும் இழப்பைச் சந்தித்து வருகின்றன. கொரோனா தாக்குதலில் இந்தியாவும் தப்பவில்லை. இங்கும் ஏப். 7ம் தேதி வரை 4281 பேருக்கு இத்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை, கொரோனாவால்
கொரோனா: வங்கிகள் கடன் வசூலிக்க தடை!

கொரோனா: வங்கிகள் கடன் வசூலிக்க தடை!

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மறு உத்தரவு வரும் வரை வங்கிகள், நிதி நிறுவனங்கள், சுய உதவிக்குழு நிறுவனங்கள் உறுப்பினர்கள், வாடிக்கையாளர்களிடம் இருந்து கடன் அசல், வட்டி வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.   கோரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. இதற்கென பொது மக்களின் நன்மை கருதி, குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் படி, ஊரடங்கு உத்தரவு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது. இந்த உத்தரவுகளை அனைத்து மாவட்டங்களிலும் முறையாக நடைமுறைப்படுத்திட உத்தரவுகள் வழங்கப்பட்டன. இதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் ஆகிய
கொரோனா அச்சம்! தேனிலவு ஜோடிக்கு வந்த சோதனை!!

கொரோனா அச்சம்! தேனிலவு ஜோடிக்கு வந்த சோதனை!!

சேலம், முக்கிய செய்திகள்
கொரோனா வைரஸ் தொற்று பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், ஒட்டுமொத்த சமூகத்தின் அன்றாட நடவடிக்கைகளையும் முடக்கிப் போட்டுள்ளது. இதுவரை கோவிட்-19 தொற்றுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், சமூக விலக்கல் மட்டுமே ஆகச்சிறந்த தடுப்பு அரண் என்கிறது மக்கள் நல்வாழ்த்துறை. மார்ச் 24ம் தேதி மாலை முதல் தொடர்ந்து 21 நாள்களுக்கு 144 தடை உத்தரவு நாடெங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், வெளிநாடு சென்று ஊர் திரும்பியவர்கள் மூலமாக கோவிட்-19 தொற்று பரவ கூடுதல் வாய்ப்பு உள்ளதால், அவர்களைப் பற்றிய தகவல்களை உடனடியாக தெரிவிக்கும்படி சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் உத்தரவிட்டுள்ளார். மூன்றாம் நபர் சொல்வதற்கு முன், சம்பந்தப்பட்ட நபர்களே இதுகுறித்த தகவல்களை தெரிவித்து, மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளனர். ஆனால