Monday, May 13மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Author: புதிய அகராதி

தமிழக மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். சீட் கிடைக்குமா?  மருத்துவ படிப்பில் 85% உள் ஒதுக்கீடு: தமிழக அரசின் அப்பீல் தள்ளுபடி

தமிழக மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். சீட் கிடைக்குமா? மருத்துவ படிப்பில் 85% உள் ஒதுக்கீடு: தமிழக அரசின் அப்பீல் தள்ளுபடி

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
டெல்லி: மருத்துவ படிப்பில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85% உள் இட ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடரும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களில், 38 சதவிகித மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். முதல் 25 இடங்களைக் கூட பிடிக்காத நிலையில், மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு 85 சதவிகிதமும், சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு 15 சதவிகித இடமும் ஒதுக்கப்படும் என்ற அரசாணையைக் கடந்த ஜூன்-22 ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்டது. தமிழக அரசின் அரசாணையின் படி சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஏறக்குறைய 300 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. எனவே, இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்திலும் தஞ்சாவூரை சேர்ந்த தார்
பள்ளிக் கல்வித்துறை செயலர் இடமாற்றம் தடை:  ஐகோர்ட் அதிரடி உத்தரவு

பள்ளிக் கல்வித்துறை செயலர் இடமாற்றம் தடை: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

முக்கிய செய்திகள்
சென்னை: பள்ளி கல்வித்துறை செயலர் உதயச்சந்திரனை இடமாற்றம் செய்யக்கூடாது என சென்னை ஐகோர்ட் தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது. பள்ளிக்கல்வி துறையில் சமீபத்தில் பல்வேறு சீர்திருத்தங்களுக்கு காரணமானவராக திகழ்ந்தவர் உதயச்சந்திரன். இதில் 10 ம்வகுப்பு, பிளஸ் டூ தேர்வு ஆகியவற்றில் முதல் 3 இடங்கள் அறிவிப்பு வராது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 11 ம் வகுப்பு பாடதிட்டங்களை மாற்றி அமைக்கும் குழுவில் இவர் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் இவரை இடமாற்றம் செய்ய முயற்சிகள் நடப்பதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து தி.மு.க, பா.ம.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுநல வழக்கு: இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் இவரை இடமாற்றம் செய்யக்கூடாது என கோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த ஐகோர்ட் இவரையும், புதிய பாடத்திட்டக்குழுவில் இடம் பெற்றுள்ள
இயற்கை விவசாயியாக மாறிய இன்ஜினீயர்!

இயற்கை விவசாயியாக மாறிய இன்ஜினீயர்!

சேலம், தன்னம்பிக்கை, முக்கிய செய்திகள், விவசாயம்
வெளிநாட்டு வேலை கனவில் மிதக்கும் இந்திய இளைஞர்கள் மத்தியில், பிரபாகரன் தனித்து தெரிகிறார். அடிப்படையில் சுயத்தை விரும்பக்கூடிய இவர், இன்றொரு வெற்றிகரமான இயற்கை விவசாயி. 'ஜீரோ பட்ஜெட்' எனப்படும் செலவில்லா வேளாண்மை மூலம் கணிசமாக சம்பாதிக்க முடியும் என்பதை நிரூபித்தும் வருகிறார். சேலம் அம்மாபேட்டை மெத்தை தெருவில் வசிக்கிறார் பிரபாகரன், வயது 38. எம்.இ., கணினி பொறியியல் படிப்பை முடித்த கையோடு, அப்போது வேகமாக வளர்ந்து கொண்டிருந்த காக்னிஸன்ட் (சிடிஎஸ்) மென்பொருள் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். பழகுநர் -குழுத்தலைவர் - திட்ட மேலாளர் வரை பதவி உயர்வுபெற்றார். நிறுவனத்தின் சார்பில், அமெரிக்காவுக்கும் செல்கிறார்...அங்கு மூன்று ஆண்டு காலம் பணியாற்றினார். அங்கு பணியாற்றிய காலத்தில் மாதம் ரூ.4.50 லட்சம் ஊதியம் பெற்று வந்த பிரபாகரன், திடீரென்று பணியில் இருந்து விலகினார். அதன்பின் அவர் தொட
பூவனம்: நீரில் ஆடும் நிலா (கவிதை)

பூவனம்: நீரில் ஆடும் நிலா (கவிதை)

இலக்கியம், திண்டுக்கல், புத்தகம், மதுரை
நீரில் ஆடும் நிலா...!  திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கவிஞர் பெ.அறிவுடைநம்பி எழுதி இருக்கிறார். தமிழக அரசின் கதர் வாரியத்தில் பணியாற்றி, ஓய்வுபெற்றவர். பல்வேறு சிற்றிதழ்களிலும் இவருடைய படைப்புகள் வெளியாகி உள்ளன. கவிஞர் மு.மேத்தாவின் முன்னுரையுடன், திண்டுக்கல் அய்யனார் பதிப்பகம் நூலை வெளியிட்டு உள்ளது. நூலில் இருந்து... கீழே விழுவது புவி ஈர்ப்பு மேலே எழுவது விலைவாசி அது நியூட்டன் விதி இது அரசியல் சதி என நையாண்டி செய்கிறார். ஒவ்வொருமுறை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயரும்போதும் நாட்டில் விலைவாசியும் உயர்ந்து விடுகிறது என்பதை அனுபவ ரீதியாக அறிந்தவர்தானே நம் கவிஞர். மற்றொரு இடத்தில், தீச்சட்டி எடுப்போம் பேருந்தையும் உடைப்போம் இது நேர்த்திக்கடன்! என்று சமீபத்திய தமிழக அரசியல் நிகழ்வுகளை பகடி செய்கிறார். இதைவிட கவிஞரின் இன்னொரு நுட்பமான பதிவு, ந
அலுவல் மொழி சட்டமும் அத்துமீறும் அரசாங்கமும்!

அலுவல் மொழி சட்டமும் அத்துமீறும் அரசாங்கமும்!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
-பிந்துசாரன், சமூக செயற்பாட்டாளர்-   1950 -ம் ஆண்டு சனவரி 26ம் நாள் இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டு, இந்திய அரசியலமைப்புச்சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதன்படி, இந்திய ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக இந்தி இருக்கும் எனத் தெரிவிக்கின்றது.   இந்தியுடன் ஆங்கிலமும் 15 ஆண்டுகளுக்கு தொடர்ந்து இருக்கும் எனவும், பிறகு 1965ம் ஆண்டு முதல் ஆங்கிலம் ஆட்சிமொழி என்னும் நிலையை தானாக இழக்கும் எனவும் அறிவிக்கின்றது. இந்திய ஒன்றிய அரசின் இந்தி மொழித்திணிப்பை எதிர்த்து, தமிழ்நாட்டில் 1965ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்மொழி காக்கும் போராட்டத்தில் முந்நூறுக்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் உயிர் ஈந்தனர்.   அதன் விளைவாக அலுவல் மொழிச்சட்டத்தில், இந்தியுடன் ஆங்கிலமும் அலுவல் மொழியாக நீட்டிக்கப்படும் எனத்திருத்தம் செய்யப்பட்டது. இதனால் இந்திய ஒன்றியத்தில் இருந்து, இந்தி மொழி அல்லாத பிறம
இயற்கை விவசாயிகளுக்கு நாட்டு மாடு இலவசம்!  ”வேளாண் புரட்சியில் கோவை இளைஞர்”

இயற்கை விவசாயிகளுக்கு நாட்டு மாடு இலவசம்! ”வேளாண் புரட்சியில் கோவை இளைஞர்”

கோயம்பத்தூர், முக்கிய செய்திகள்
"இந்த சமுதாயம்தான் நமக்கு எல்லாமே கொடுத்தது; கொடுத்து வருகிறது. நாமும் அதற்குரிய நன்றிக்கடனைச் செலுத்தக் கடமைப்பட்டு இருக்கிறோம். அதற்காகவே, இயற்கை விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக சொந்த செலவில் நாட்டு மாடுகளை இலவசமாக வழங்கி வருகிறோம்," என்று தீர்க்கமாக பேசுகிறார் மோகன்ராஜா. கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த மோகன்ராஜா (37). இயற்கை மீதான நேசத்தின் வெளிப்பாடாக, 'காமதேனு' விவசாயிகள் மற்றும் நாட்டு மாடுகள் நல்வாழ்வு அறக்கட்டளை'யை நிறுவி, பாரம்பரிய விவசாயத்தில் ஈடுபடும் உழவர்களை ஊக்குவிக்க, நாட்டு மாடுகளை இலவசமாக வழங்கி வருகிறார். அவருடனான உரையாடலில் இருந்து... "நாட்டுப் பசுக்களில் இருந்து கிடைக்கும் பாலில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன. ரத்த அழுத்தம், நீரிழிவு, வாதம் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் நம்மை அண்டாமல் தடுக்க, இயற்கை நமக்கு அளித்த கொடைதான் நாட்டு மாட்டினங்களும் அவை தரும
திராவிட மண்ணில் மூக்கறுப்பு போர்! சேலம் கல்வெட்டில் ஆதாரம் #மூக்கறுப்புபோர்

திராவிட மண்ணில் மூக்கறுப்பு போர்! சேலம் கல்வெட்டில் ஆதாரம் #மூக்கறுப்புபோர்

சிறப்பு கட்டுரைகள், சேலம், திருச்சி, மதுரை, முக்கிய செய்திகள், வரலாறு
பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார்? என்பதைவிட பல திடுக்கிடும் திருப்பங்களும், மர்ம முடிச்சுகளும் கொண்டது, மூக்கறுப்புப் போர். யுத்தத்தில் வீரர்கள் வெல்வர்; அல்லது, மடிவர். ஆனால் எதிரிகளை மட்டுமின்றி எதிரி நாட்டில் எதிர்ப்படும் எல்லோரின் மூக்கையும், மேலுதட்டையும் அறுத்து, மூட்டையில் கட்டிச்செல்லும் யுத்தமும் நம் திராவிட மண்ணில் நடந்திருக்கிறது.   இப்படி ஒரு மூர்க்கத்தனமான போர், மதுரை திருமலை நாயக்கருக்கும், மைசூர் அரசன் கந்தீரவனுக்கும் இடையே நடந்துள்ளதாகச் சொல்கிறார், சேலம் வரலாற்று ஆய்வாளர் ஆறகழூர் வெங்கடேசன். போர்க்களம், சேலம் அல்ல; ஆனால் மூக்கறுப்பு யுத்தம் நடந்ததற்கான ஆதாரம் சேலத்தில்தான் கிடைத்திருக்கிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஆறகழூரை சேர்ந்த வெங்கடேசன், அடிப்படையில் ஒரு மருந்தாளுநர். தீவிர கடவுள் மறுப்பாளர்; அறிவியல் சிந்தனையாளர். ஆனால், தற்போது கோயில் கோயிலா
தலித்துகளுக்கு முடி வெட்ட மாட்டோம்! தீண்டாமை பிடியில் சேலம் கிராமம்!!

தலித்துகளுக்கு முடி வெட்ட மாட்டோம்! தீண்டாமை பிடியில் சேலம் கிராமம்!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
-குற்றம் கடிதல்-   'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவன் வாழ்ந்த பூமியில்தான் இன்னும் சாதிக் கொடுமைகளும், அதன்பேரில் நிகழும் வன்முறைகளும் ஓயாத அலைகளாக எழுந்து கொண்டே இருக்கின்றன.     ஆண்டான் அடிமை: பொதுவெளியில் வள்ளுவனையும், பாரதியையும் கூட்டணி சேர்த்துக்கொள்ளும் வெள்ளுடை வேந்தர்கள் யாருமே, தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்களைப் பின்பற்றுவதில்லை. அதனால்தான் ஆண்டான் அடிமை மனோபாவத்திலேயே இன்னும் தலித்துகள் மீதான அடக்குமுறைகள் தொடர்கின்றன.   சேலம் மாவட்டம் கீரிப்பட்டி முதல்நிலைப் பேரூராட்சி கிராமம், இன்னும் தலித்துகள் மீதான ஒடுக்குமுறைகளில் இருந்தும், ஒதுக்கி வைத்தலில் இருந்தும் மீளவே இல்லை. நாம் அந்தக் கிராமத்திற்கு சென்றபோது, தலித் இளைஞர் ஒருவரிடம் பேசினோம். அவர், அந்த ஊருக்கு முன்பின் அறிமுகமில்லாத ஒருவரிடம் (நம்மிடம்) நீண்ட நேரம் நின்று பேசிக்க
ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ; 27-7-2017 முதல் 13-2-2019 வரை ; எந்த ராசிக்கு என்ன நடக்கும்?

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ; 27-7-2017 முதல் 13-2-2019 வரை ; எந்த ராசிக்கு என்ன நடக்கும்?

ராசிபலன்
மேஷம் ஆளும் குணமும் ஆன்மிக பலமும் அதிகமுள்ளவர்களே! உங்களுக்கு 27.7.2017 முதல் 13.02.2019 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம். ராகுவின் பலன்கள் இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தில் அமர்ந்து மன உளைச்சலைத் தந்துகொண்டிருந்த ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் வந்தமர்வதால் குழந்தை பாக்கியம் உண்டு. பிள்ளைகள் உங்கள் மீது பாசமாக இருப்பார்கள். மகளுக்குத் திருமணம் நிச்சயமாகும். மகன் கூடாப் பழக்கவழக்கங்களிலிருந்து விடுபடுவார். குல தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். என்றாலும் ராகு 4-ம் வீட்டில் அமர்வதால் தாயாரின் உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள். வீட்டை விரிவுபடுத்துவது, அழகுபடுத்துவது, இடித்துக் கட்டுவது போன்ற பராமரிப்புச
ஹெர்னியா அச்சம் வேண்டாம்! டாக்டர் சொல்வதை கேளுங்க…

ஹெர்னியா அச்சம் வேண்டாம்! டாக்டர் சொல்வதை கேளுங்க…

அலோபதி, சேலம், மருத்துவம்
மருத்துவமனைகளில் அதிகளவில் நடக்கும் அறுவை சிகிச்சைகளில் ஒன்று, குடலிறக்க (ஹெர்னியா) அறுவை சிகிச்சை. பெண்களைவிட அதிகளவில் ஆண்களே ஹெர்னியா பிரச்சினைக்கு ஆளாகின்றனர். இந்த பாதிப்பு ஏன் ஏற்படுகிறது? தீர்வுகள் குறித்து விளக்குகிறார், சேலம் டாக்டர் ராமு லைப் கேர் மருத்துவமனை மருத்துவர் வையாளி ராமு.   குடலிறக்கம் (ஹெர்னியா) என்றால் என்ன?: பலரும் கருதுவதுபோல் குடலிறக்கம் எனப்படும் ஹெர்னியா, ஒரு நோய் அல்ல. அது, உடல் பகுதியில் ஏற்படும் ஒரு பழுது. அவ்வளவுதான். வயிற்றுப்பகுதியின் அடிப்புறச் சுவர், சில பகுதிகளில் நலிந்து, வலுவிழந்து இருக்கும். அவ்வாறு வலுவிழந்து காணப்படும் பகுதி வழியே, சிறுகுடல் பிதுக்கிக் கொண்டு அல்லது துருத்திக்கொண்டு இறங்கி விடும். இதைத்தான், 'ஹெர்னியா', அதாவது 'குடல் இறக்கம்' என்கிறோம்.   அறிகுறிகள்?   வயிறு வ