Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

8826 போலீஸ் பணிக்கு ஆளெடுப்பு! எஸ்எஸ்எல்சி போதுமானது!!

தமிழக காவல்துறை, சிறைத்துறைகளில் காலியாக உள்ள 8826 இரண்டாம்நிலை காவலர், சிறைக்காவலர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்குழுமம் (டிஎன்யுஎஸ்ஆர்பி), இரண்டாம்நிலை காவலர், இரண்டாம்நிலை சிறைக்காவலர், தீயணைப்பாளர் பதவிகளுக்கான அறிவிப்பாணையை மார்ச் 6, 2019ம் தேதி வெளியிட்டுள்ளது.

தமிழக காவல்துறையில் மாவட்ட / மாநகர ஆயுதப்படைகளில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்காக மட்டுமே 2465 இரண்டாம்நிலைக் காவலர் பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தவிர, தமிழ்நாடு சிறப்புக்காவல் படையில் 5962 இரண்டாம்நிலை காவலர் பணியிடங்களுக்கும், சிறைத்துறையில் 208 (22 இடங்கள் பெண்களுக்கானவை) இரண்டாம்நிலை சிறைக்காவலர் பணியிடங்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் 191 தீயணைப்பாளர் பணியிடங்களுக்கும் என மொத்தம் 8826 பதவிகளுக்கு போட்டித்தேர்வுகள் மூலம் ஆள்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.

 

இவை தவிர, ஆயுதப்படையில் 7, சிறைத்துறையில் 12, தமிழ்நாடு சிறப்புக்காவல் படையில் 43 என மொத்தம் 62 பின்னடைவு காலிப்பணியிடங்களும் இவற்றுடன் நிரப்பப்பட உள்ளன.

 

கல்வித்தகுதி:

 

இப்பணியிடங்களில் சேர
குறைந்தபட்சம், பத்தாம் வகுப்பு
தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர், கண்டிப்பாக தமிழை
ஒரு பாடமாக படித்திருத்தல் வேண்டும்.
அவ்வாறு இல்லாதபட்சத்தில், பணியில்
சேர்ந்த நாளில் இருந்து இரண்டு
ஆண்டுகளுக்குள் டிஎன்பிஎஸ்சி மூலம்
நடத்தப்படும் இரண்டாம்நிலைத்
தமிழ்த்தேர்வில் தேர்ச்சி
பெற வேண்டும்.

 

வயது தகுதி:

பொதுப்பிரிவினர் 1.7.2019 அன்று
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும்,
24 வயதுக்கு மேற்படாதவராகவும்
இருத்தல் வேண்டும். பிசி, எம்பிசி, டிஎன்சி
பிரிவினர் மேற்சொன்ன தேதியில்
26 வயதுக்கு மேற்படாதவராகவும்,
எஸ்சி, எஸ்சி (ஏ) பிரிவினர் 29
வயதுக்குள்ளும், ஆதரவற்ற விதவைகள்
35 வயதுக்குள்ளும், முன்னாள்
ராணுவத்தினர் 45 வயதுக்கு
மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

 

தேர்வு முறைகள்:

 

எழுத்துத்தேர்வு 80 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. போட்டித்தேர்வு மட்டுமின்றி, உடற்கூறு அளத்தல், உடல்தகுதி தேர்வு, உடற்திறன் போட்டிகள் அடிப்படையிலும் காவலர் பணிக்கு ஆள் தேர்வு செய்யப்படுவர். இவற்றுக்கு 15 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. என்சிசி, என்எஸ்எஸ், விளையாட்டுச் சான்றிதழ் போன்றவற்றுக்கு மொத்தமாக சேர்த்து 5 மதிப்பெண்கள் சிறப்பு மதிப்பெண்களாக வழங்கப்படும்.

 

தேர்வுக்கட்டணம்:

 

இத்தேர்வுக்கு தமிழ்நாடு சீருடைப்பணியாளர் குழுமத்தின் இணையதளத்தின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 8.3.2019ம் தேதி முதல் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 8.4.2019.

 

தேர்வுக்கட்டணம் ரூ.130. இந்தக் கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவோ அல்லது வலைவங்கி (Net banking) / கடன் அட்டை (Credit card) / பற்று அட்டை (Debit card) / எஸ்பிஐ வங்கியின் இ-சலான் மூலமாகவோ செலுத்தலாம்.

 

மேலும் விவரங்களுக்கும், விண்ணப்பம் பதிவேற்றம் செய்வதற்கும் www.tnusrbonline.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

 

– செங்கழுநீரார்.