Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம் மாநகராட்சியில் 719361 வாக்காளர்கள்; ஆண்களை விட பெண் வாக்குகள் அதிகம்!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, சேலம் மாநகராட்சியில் புகைப்படத்துடன் கூடிய புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி,
சேலம் மாநகராட்சியில் புகைப்படத்துடன்
கூடிய புதிய வாக்காளர் பட்டியலை,
ஆணையர் கிறிஸ்துராஜ் வியாழக்கிழமை
(டிச. 9) வெளியிட்டார்.
அனைத்து அரசியல்
கட்சி பிரதிநிதிகன்
முன்னிலையில் இந்தப் பட்டியல்
வெளியிடப்பட்டது.

 

இதுகுறித்து
சேலம் மாநகராட்சி ஆணையர்
கிறிஸ்துராஜ் கூறியது:

 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு
1.11.2021ம் தேதியன்று
இந்திய தேர்தல் ஆணையத்தால்
வெளியிடப்பட்ட தமிழ்நாடு
சட்டமன்றத் கொகுதி ஒருங்கிணைந்த
வாக்காளர் வரைவுப் பட்டியல்களை
அடிப்படையாகக் கொண்டு,
சம்பந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி
அமைப்புகளுக்கான வாக்காளர்
பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.

 

வாக்காளர் பட்டியல்கள் அடிப்படையில்,
சேலம் மாநகராட்சிப் பகுதியில் வார்டு
உறுப்பினர்களின் எண்ணிக்கை 60 ஆகும்.
மொத்தம் 709 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.
ஆண் வாக்காளர்கள் 352523,
பெண் வாக்காளர்கள் 366751,
இதர வாக்காளர்கள் 87 என மொத்த
வாக்காளர்கள் எண்ணிக்கை
719361 ஆகும்.

 

வாக்காளர் பட்டியலில்
புதிதாக பெயர் சேர்த்தல்,
இடமாறுதல் உள்ளிட்ட
விண்ணப்பங்களை வழங்கலாம்.
விரைவில் துணை வாக்காளர்
பட்டியலும் வெளியிடப்படும்.

 

சேலம் மாநகராட்சியில்
அதிகபட்சமாக 8வது வார்டில்
15881 வாக்காளர்களும்,
குறைந்தளவாக 47வது வார்டில்
8403 வாக்காளர்களும் உள்ளனர்.
இவ்வாறு ஆணையர் கூறினார்.

 

புகைப்பட வாக்காளர் பட்டியல்
வெளியீட்டின்போது
செயற்பொறியாளர்கள்,
உதவி ஆணையர்கள்,
உதவி செயற்பொறியாளர்கள்,
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்
கலந்து கொண்டனர்.