எடப்பாடி பழனிசாமி இப்படி; மம்தா பானர்ஜி அப்படி!
பிறப்பு முதல் இறப்பு வரை எல்லாவற்றுக்கும் ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கிய காவி கும்பலை எதிர்க்கும் மிகப்பெரும் சக்தியாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உருவெடுத்துள்ளார்.
மத்திய அரசால் வழங்கப்படும் ஆதார் எண்ணை அனைத்து திட்டங்களுடனும் இணைக்கும் படி மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. அதேபோல் சிம் கார்டுகளை சமூக விரோதிகள், தீவிரவாதிகள் பயன்படுத்துவதைத் தடுக்க மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் கடந்த மார்ச் 23-ஆம் தேதி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் கொல்கத்தாவில் ஒரு பொதுக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், ''நான் என்னுடைய மொபைல் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க மாட்டேன். ஆதார் இணைக்குமாறு கட்டாயப்படுத்துவது தனிநபர் உரிமை மீது நடத்தப்படும் தாக்குதலாகும். இதனால் என் மொபைல் எண் இணைப்பை துண்டித்தாலும் பரவாயில...