பயந்துட்டீங்களா சீமான்? விஜய் மீதான விமர்சனத்தின் பின்னணி!
நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் கட்சியைத் தொடங்கி, கொடி அறிமுகம், கொள்கை விளக்க மாநாடு என்று நின்று நிதானமாக, டெஸ்ட் கிரிக்கெட் போல ஆடத் தொடங்கி இருக்கிறார்.
கடந்த அக். 27ஆம் தேதி, கள்ளக்குறிச்சி மாவட்டம் விக்கிரவாண்டியில் நடந்த, த.வெ.க., மாநாட்டில், கட்சியின் கொள்கை விளக்கம் குறித்து பேசினார், விஜய்.
அந்த மாநாட்டில்,
''தந்தை பெரியார், அண்ணா
பெயரைச் சொல்லிக்கொண்டு,
திராவிட மாடல் என்ற பெயரில்
தமிழ்நாட்டைச் சுரண்டி கொள்ளையடிக்கிறது
ஒரு குடும்பம். அந்த சுயநலக்
கூட்டம்தான் நமது அரசியல் எதிரி,''
என திமுகவின் பெயரைச்
சொல்லாமலேயே சம்மட்டி அடி
கொடுத்தார் விஜய்.
அதேபோல,
''சாதி, மதத்தின் பெயராலே
பெரும்பான்மை, சிறுபான்மை
பயத்தைக் காட்டும் பிளவுவாத
அரசியல் செய்பவர்கள்தான்
நமது கொள்கை எதிரி,'' என்று
பாஜக, ஆர்எஸ்எஸ் சங்பரிவாரங்களின்
மண்டையிலும் 'பொளேர்' என
ஒரு போடு போட்டார...