இன்னொரு வன்முறையை கட்டவிழ்க்க தயாராகிறது தமிழக அரசு!; மாவோயிஸ்ட் விவேக் ‘திடுக்’ தகவல்
- சிறப்பு நேர்காணல் -
இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியின் முன்னணி தளகர்த்தர்களில் ஒருவரான விவேக் மாவோயிஸ்ட், கடந்த ஜூன் 27ம் தேதி சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு வந்திருந்தார். எப்போதும் காவல்துறை உளவுப்பிரிவின் நெருக்கமான கண்காணிப்பு வளையத்திற்குள் இருக்கும் அவரை நேரில் சந்தித்தோம். அவருடனான உரையாடலில் இருந்து...
புதிய அகராதி: பிரதமர் மோடியை கொல்வதற்கு மாவோயிஸ்டுகள் சதி திட்டம் தீட்டியிருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளி வந்தனவே?
விவேக்: பிரதமர் மோடியைக் கொல்ல மாவோயிஸ்டுகள் சதி செய்ததாக, மஹாராஷ்டிரா மாநில உளவுத்துறை ஒரு கடிதத்தை வெளியிட்டது. இது எவ்வளவு பெரிய கேலி கூத்து என்றால், அப்படி கடிதம் எழுதியதாகச் சொல்லப்படும் நபர், ஜேஎன்யூ பல்கலையில் மாணவர் தலைவராக இருந்தவர்.
சிறையில் இருக்கக்கூடிய ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளை விடுதலை செய்வத...