Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Switzerland

இந்திய வங்கிகளின் செயல்படாத சொத்துக்களின் மதிப்பு 9.50 லட்சம் கோடியாம்!

இந்திய வங்கிகளின் செயல்படாத சொத்துக்களின் மதிப்பு 9.50 லட்சம் கோடியாம்!

இந்தியா, முக்கிய செய்திகள்
இந்திய வங்கிகளின் செயல்படாத சொத்துக்களின் மதிப்பு 9.50 லட்சம் கோடியாக உயரும் என்று அசோசெம் எனப்படும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அசோசெம் அறிக்கையில் மேலே சொல்லப்பட்ட ஒரு வரி தகவல்தான், புதிய செய்தி. அதற்கு முன்பாக செயல்படாத சொத்துக்கள் என்றால் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டியதாகிறது. வாராக்கடன் (Bad Debt) மற்றும் வாரா அய்யக்கடன் (Bad and Doubtful Debt) என்ற சொற்கள் எல்லாம் கணக்குப்பதிவியலை ஒரு பாடமாக படித்தவர்கள் நன்கு அறிவர். அந்த வாராக்கடன் சொல்லுக்குதான் புதிய மூலாம் பூசி, 'செயல்படாத சொத்துக்கள்' (NPA - Non Performing Asset) என்கின்றனர். இந்த புதிய சொல்லாடல் எல்லாமே 1991க்கு பிறகுதான் நடைமுறைக்கு வருகிறது. அதாவது, உலகமயம் கொள்கையை கையில் எடுத்த பிறகு. அப்போது இருந்துதான் தாராளமயம், தனியார்மய கொள்கைகளும் பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டன.
வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கியுள்ள இந்தியர்கள் யார் யார்?

வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கியுள்ள இந்தியர்கள் யார் யார்?

அரசியல், இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
வெளிநாடுகளில் பல்லாயிரம் கோடிக்கணக்கில் சொத்துகளை பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் யார் யார் என்பது குறித்த விவரங்கள் 'பாரடைஸ் ஆவண கசிவு' மூலம் வெளியாகியுள்ளது. இது, இந்திய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது. வளரும் நாடுகளில் இருந்து வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக கருப்பு பணம் பதுக்குவது ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக, கடந்த 2002ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை இந்தியாவில் இருந்து மட்டும் 343.04 பில்லியன் டாலர் மதிப்பிலான கருப்புப் பணம் அயல் நாடுகளில் பதுக்கப்பட்டு உள்ளதாக ஓர் ஆய்வு கூறுகிறது. இதன்மூலம் கருப்புப் பணம் பதுக்கலில் உலகளவில் இந்தியாவுக்கு 5வது கிடைத்துள்ளது. அதேநேரம், 2011ம் ஆண்டில் மட்டும் 84.93 பில்லியன் டாலர் கருப்புப் பணம் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. அந்த ஆண்டில் இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இந்தியாவுக்கு 3
என் பிறந்தநாளுக்கு யாரும் கேக் வெட்ட வேண்டாம்; கால்வாய் வெட்டுங்கள்!; கமல்ஹாஸன்

என் பிறந்தநாளுக்கு யாரும் கேக் வெட்ட வேண்டாம்; கால்வாய் வெட்டுங்கள்!; கமல்ஹாஸன்

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
''என் பிறந்த நாளையொட்டி யாரும் கேக் வெட்ட வேண்டாம். அதற்கு பதிலாக கால்வாய் வெட்டுங்கள்'' என்று தனது ரசிகர்களுக்கு நடிகர் கமல்ஹாஸன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர் கமல்ஹாஸன் அரசியல் கட்சி தொடங்குவதாக கூறியிருந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு எண்ணூர் கடலில் அனல்மின் நிலையத்தின் சாம்பல் கழிவுகள் கலப்பதாக ட்விட்டரில் புகார் கூறியிருந்தார். மேலும், அவர் அதிகாலையில் திடீரென்று எண்ணூர் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வும் மேற்கொண்டார். வழக்கமான ட்விட்டர் அரசியலில் இருந்து கமல் நேரடியாக களம் இறங்கியது அரசியல் கட்சிகளிடையே பரபரப்பை ஏற்ப டுத்தியது. அத்துடன் அவர், அங்குள்ள மீனவ மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். கமல்ஹாசன் தனது பிறந்த நாளான நவம்பர் 7ம் தேதி அன்றுதான் ரசிகர்களை சென்னைக்கு நேரில் வரவழைத்து சந்தித்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்தாண்டு இரண்டு நாள்கள் முன்னதா
மனித மூலதனக் குறியீடு: இந்தியாவின் நிலை மோசம்!

மனித மூலதனக் குறியீடு: இந்தியாவின் நிலை மோசம்!

இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
வல்லரசு கனவை முன்னெடுத்துச் செல்வதாக பிரதமர் நரேந்திர மோடி கர்ஜனை செய்தாலும், மனித மூலதனக் குறியீட்டில் இந்தியாவின் நிலை மிகவும் பின்தங்கி இருப்பது உலக பொருளாதார மன்றத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் மனித வளத்தைப் பயன்படுத்தும் விதம், மனிதர்களின் உற்பத்திறன் குறித்து உலகப் பொருளாதார மன்றம் (WORLD ECONOMIC FORUM) என்ற அமைப்பு அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறது. அந்த அமைப்பு, உலகம் முழுவதும் 130 நாடுகளில் உள்ள மனித மூலதன பயன்பாட்டை ஆய்வு செய்து நேற்று (செப். 13) அறிக்கை (GLOBAL HUMAN CAPITAL  REPORT-2017) வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வில், இந்தியாவுக்கு 103-வது இடமே கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது. அதென்ன மனித மூலதனம்?: உலகப் பொருளாதாரத்தில் ஆக்கப்பூர்வ தாக்கத்தையும், மதிப்புக் கூட்டும் வல்லமையையும் மக்களுக்கு அளிக்கும் அறிவும், திறமையுமே மனித மூலதனம் என்று அந்த அமைப்