Wednesday, December 4மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: super star

விஜய் போட்ட குண்டு; கலக்கத்தில் ஆளுங்கட்சி!

விஜய் போட்ட குண்டு; கலக்கத்தில் ஆளுங்கட்சி!

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விழுப்புரம்
''தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி வைப்போருக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கீடும், அதிகாரப் பகிர்வும் கொடுப்போம்,'' என்று அக்கட்சித் தலைவர் நடிகர் விஜய் கூறியிருப்பது, தமிழக அரசியல் களத்தில் பெரும் சூட்டைக் கிளப்பி இருக்கிறது. தமிழ்த்திரை உலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி 2ம் தேதி, தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு, விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை தொடங்கியபோதே அவரின் அரசியல் வருகை தொடர்பான பேச்சும் தொடங்கி விட்டது. இன்றைய தேதியில், இந்தியாவில் 200 கோடி ரூபாய் சம்பளம் பெறும் வெகுசில நடிகர்களில் விஜய்யும் ஒருவர். அதிகபட்ச சம்பளம், புகழின் உச்சத்தில் இருக்கும் ஒருவர் முழுநேர அரசியல்வாதியாக களம் காண வருகிறார் என்றபோதே பலரின் புருவங்களும் உயர்ந்தன. கட்சி தொடங்கியபோதே, நமது இலக்கு 2026 சட்டப...
ரஜினி நாய் கூட எம்எல்ஏ ஆகிவிடும்!: அன்புமணி ராமதாஸ் தாக்கு

ரஜினி நாய் கூட எம்எல்ஏ ஆகிவிடும்!: அன்புமணி ராமதாஸ் தாக்கு

அரசியல், அரியலூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தின் பால்தாக்கரே போல செயல்பட்டு வரும் பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ், அவருடைய மகன் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சினிமாக்காரர்கள் மீதும் குறிப்பாக ரஜினிகாந்த் மீதும் கடும் விமர்சனங்களை முன்னெடுத்து வருகின்றனர். ரஜினியின் தயாரிப்பில் பாபா படம் வெளியானபோது, ரஜினியின் மீதான பாமக பாய்ச்சல் உச்சக்கட்டத்தில் இருந்தது. பல திரைமறைவு சமரசங்களுக்குப் பிறகு, பாபா படப்பிரச்னை முடிவுக்கு வந்தது. ஆனாலும், ஒட்டுமொத்தமாகவே சினிமாக்காரர்கள் மீதும், அந்த துறை மீதான தாக்குதல் போக்கையும் பாமக இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கருணாநிதியின் முதுமை, ஜெயலலிதா மறைவு காரணமாக தமிழக அரசியலில் இயல்பாகவே ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. மக்களின் மனம் கவர்ந்த தலைவர்கள் இல்லாத நிலையில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தங்களுடைய அரசியல் ஆசைகளை வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். கடந்த மே மாதம் ...
ரஜினியின் ‘வாய்ஸ்’ எங்கே?: நெட்டிஸன்கள் கேள்வி

ரஜினியின் ‘வாய்ஸ்’ எங்கே?: நெட்டிஸன்கள் கேள்வி

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நதிகள் இணைப்புக்காக வீடியோவில் குரல் கொடுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நீட் தேர்வு, நெடுவாசல் பிரச்னைகளுக்கு ஏன் குரல் கொடுப்பதில்லை? என்று சமூகவலைத்தளங்களில் இணையவாசிகள் கேள்விகளால் துளைத்தெடுத்துள்ளனர். தமிழக அரசியல் களத்தை ஜெயலலிதாவுக்கு முன், ஜெயலலிதாவுக்குப் பின் என்று இரண்டு காலக்கட்டங்களாக பார்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். மக்களிடம் மிகப்பெரிய ஆளுமையாக விளங்கிய எம்ஜிஆர் மறைந்தபோதுகூட, அடுத்தது யார்? என்பதில் நீண்ட குழப்பங்கள் ஏற்படவில்லை. வி.என்.ஜானகியை ஆதரித்தவர்கள்கூட விரைவிலேயே ஜெயலலிதா அணியில் இணைந்து கொண்டனர். இப்போதைய நிலை அப்படி இல்லை. அடுத்து யாரெல்லாம் அரசியல் களத்திற்கு வரலாம் என்ற பட்டியல் போட்டால் அதிலும் சினிமாக்காரர்களே முதல் வரிசையை ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். ரஜினி, கமல், விஜய், விஷால், சூர்யா இப்படி நீள்கிறது பட்டியல். 100 படங்களைக் கடந்த முன்னணி...
”நான்தான் ஜெயலலிதாவின் கதாசிரியர்!”; மறக்கப்பட்ட படைப்பாளியின் கதை! #Jayalalitha #Rajinikant

”நான்தான் ஜெயலலிதாவின் கதாசிரியர்!”; மறக்கப்பட்ட படைப்பாளியின் கதை! #Jayalalitha #Rajinikant

இலக்கியம், சினிமா, சிறப்பு கட்டுரைகள், சேலம், தஞ்சாவூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை 'ரன் மெஷின்' என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, 'எழுத்து இயந்திரம்' என்றே சொல்லலாம்.   இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக்குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை. இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. 'சூப்பர் ஸ்டார்' ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, 'புவனா ஒரு கேள்விக்குறி' (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.   தவிர, 'பனிமலை' என்ற நாவல், 'என்னதான் முடிவு?' (1965) படமாக ஆக்கம் பெற்றது. 'பத்ரகாளி' (1976), 'சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு' (1977), 'வட்டத்துக்குள் சதுரம்' (1978), 'நதியை தேடிவந்த கடல்' (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன. &...