Thursday, October 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: stay awake 24 hours

துணிச்சலின் முகவரி  மீனாட்சி!

துணிச்சலின் முகவரி மீனாட்சி!

சென்னை, மகளிர், மதுரை, வேலூர்
''தமிழகத்தின் முதல் பெண் தீயணைப்பு அலுவலர்" "இப்போதுள்ள இளம்பெண்கள் எதையும் ஈஸியாக எடுத்துக்கொள்கிறார்கள். சொடுக்குப்போட்ட மாத்திரத்தில் எல்லாமே கிடைத்துவிட வேண்டும் என சினிமாத்தனமாக யோசிக்கிறார்கள். கனவுலகில் வாழ்கிறார்கள். அந்தக்கனவு கலையும்போதுதான், நிஜ வாழ்க்கை எவ்வளவு கடினமானது என்பது தெரியும். பெண்களோ, ஆண்களோ யாராக இருந்தாலும் உழைப்பைக் கைவிடக்கூடாது. உழைத்தால்தான் மேலே உயர முடியும். எளிமையாகச் சொல்வதென்றால், உன் வாழ்க்கை உன் கையில்," என்கிறார், மீனாட்சி விஜயகுமார். தமிழகத் தீயணைப்புத்துறையில் பெண்களும் பணியாற்றலாம் என்ற அறிவிப்பு வந்தபோது, மாவட்ட தீயணைப்பு அலுவலராக முதன்முதலில் இரண்டு பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர், மீனாட்சி விஜயகுமார். இவர் சென்னையில் நியமிக்கப்பட்டதால், அப்போதே பெரிய அளவில் ஊடக கவனம் பெற்றவர். துறையில் இன்றுவரை அப்பழுக்கின்றி பணியாற்றி வர...