ஆத்தூர்: பள்ளி மாணவி கழுத்து அறுத்து கொலை! தலையை துண்டித்து சாலையில் வீசிய கொடூரன்!!
ஆத்தூர் அருகே, வீடு புகுந்து பள்ளி மாணவியை கழுத்து அறுத்துக் கொலை செய்ததுடன், தலையை துண்டித்து சாலையில் வீசிவிட்டுச் சென்ற பயங்கர நிகழ்வு குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூலி வேலை:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டியை சேர்ந்தவர் குழந்தைவேல். இவருடைய மகன் தினேஷ்குமார். நெல் அடிக்கும் இயந்திர ஆபரேட்டராக கூலி வேலை செய்து வருகிறார்.
இவருடைய மனைவி சாரதா. இவர்கள் வீட்டில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் உள்ள தெற்குக்காடு பகுதியில் சாமிவேலு & சின்னப்பொண்ணு தம்பதியினர் வசித்து வருகின்றனர்.
இந்தத் தம்பதிக்கு ராஜலட்சுமி (14) என்ற மகள் இருந்தார். அரசுப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். திங்கள் கிழமை (அக்டோபர் 22, 2018ம் தேதி) இரவு 7.30 மணியளவில் சின்னப்பொண்ணுவும், சிறுமி ராஜலட்சுமியும் (14) வீட்டுக்குள் அமர்ந்து ப...