Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Samantha

யுடர்ன் – சினிமா விமர்சனம்; ”குற்றத்தின் தண்டனை, மரணம்!”

யுடர்ன் – சினிமா விமர்சனம்; ”குற்றத்தின் தண்டனை, மரணம்!”

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  தமிழில் ஹாரர், திரில்லர் வகைமை படங்களுக்கென இதுவரை ஆகிவந்த மரபுகளை முற்றாக தகர்த்து வீசிவிட்டு, வித்தியாசமான திரைமொழியில் வெளிவந்திருக்கிறது யுடர்ன்.   நடிகர்கள்: சமந்தா அக்கினேனி, 'ஈரம்' ஆதி, ராகுல் ரவீந்திரன், பூமிகா சாவ்லா, 'சித்திரம் பேசுதடி' நரேன், 'ஆடுகளம்' நரேன், சிறுமி ஆர்னா மற்றும் பலர்.   தொழில்நுட்ப கலைஞர்கள்: இசை: பூர்ணசந்திரா தேஜஸ்வி, ஒளிப்பதிவு: நிகேத் பொம்மி, எடிட்டிங்: சுரேஷ் ஆறுமுகம்   தயாரிப்பு: ஸ்ரீனிவாச சிந்தூரி மற்றும் ராம்பாபு பண்டாரு, இயக்கம்: பவன்குமார்   கதை என்ன?:   குறிப்பிட்ட ஒரு மேம்பாலத்தில் சாலையின் நடுவே இருக்கும் தடுப்புக் கற்களை அகற்றிவிட்டு யுடர்ன் எடுக்கும் வாகன ஓட்டிகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணம் அடைகின்றனர். அவ்வாறு ஏன் நடக்கிறது? என்பதை, ரசிகர்களை இருக்கையின் நுனிக்குக் கொண்டு வ
‘மெர்சல்’ – படம் எப்படி இருக்கு?

‘மெர்சல்’ – படம் எப்படி இருக்கு?

இந்தியா, சினிமா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் இன்று (அக். 18, 2017) 3200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது 'மெர்சல்'. நடிப்பு: விஜய், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யராஜ், சத்யன், கோவை சரளா, 'யோகி' பாபு. இசை: ஏ.ஆர்.ரஹ்மான்; ஒளிப்பதிவு: விஷ்ணு; தயாரிப்பு; ஸ்ரீதேனாண்டாள் ஸ்டூடியோஸ்; இயக்கம்: அட்லீ. படத்தின் துவக்கத்தில் சென்னையில் அடையாறு, திருவல்லிக்கேணி, போட் கிளப் ஆகிய இடங்களில் மருத்துவத்துறை தொடர்பான ஆட்கள் அடுத்தடுத்து மர்ம நபர்களால் கடத்திக் கொல்லப்படுகின்றனர். இதற்கிடைய பிரான்ஸ் நாட்டிற்குச் செல்லும் விஜய், அங்கு ஒரு மேஜிக் நிகழ்ச்சியை நடத்துகிறார். அந்த அரங்கிலும் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். இதைத் தொடர்ந்து சத்யராஜ், இந்த கொலைகளுக்குக் காரணம் விஜய்தான் என்ற சந்தேகத்தின்பேரில் அவரை கைது செய்கிறார். உண்மையில் இ
‘மெர்சல்’ படத்திற்கு மீண்டும் சிக்கல்; தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா?

‘மெர்சல்’ படத்திற்கு மீண்டும் சிக்கல்; தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா?

இந்தியா, உலகம், சினிமா, முக்கிய செய்திகள்
'மெர்சல்' படத்திற்கு விலங்குகள் நலவாரியத்திடம் இருந்து ஆட்சேபனையில்லா சான்றிதழ் இன்னும் பெறப்படாததால், திட்டமிட்டபடி தீபாவளிக்கு படத்தை வெளியிடுவதில் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடிகர் விஜய் - இயக்குநர் அட்லி கூட்டணியில் சுமார் ரூ.135 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது 'மெர்சல்'. ஸ்ரீதேனாண்டால் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் முரளி ராமசாமி படத்தை தயாரித்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், நித்யா மேனன், சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் விஜய் முதன்முறையாக மூன்று வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேஜிக் கலைஞராகவும் முதன்முதலாக நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏற்கனவே பாடல்கள் பட்டித்தொட்டி எங்கும் பிரபலம் அடைந்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படத்தை வரும் 18ம் தேதி வெளியிடுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்
இதுதான் ‘மெர்சல்’ படத்தின் கதையா?; அட்லி அதிர்ச்சி

இதுதான் ‘மெர்சல்’ படத்தின் கதையா?; அட்லி அதிர்ச்சி

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இயக்குநர்கள் சங்கர், முருகதாஸ், மணிரத்னம் போனற பிரபல இயக்குநர்கள் தங்கள் படத்தின் கதை திரைக்கு வரும் வரை எள்ளளவு கசிந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். அதேபோல், படமாக்கும் காட்சிகள்கூட வெளியாகக்கூடாது என்பதற்காக படப்பிடிப்பு தளங்களில் நடிகர்கள் உள்பட ஊழியர்கள் மொபைல் போன் பயன்படுத்தவும் தடை விதிப்பார்கள். இப்போது ஏறக்குறைய எல்லா இயக்குநர்களுமே இதேபோன்ற கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில், படு ரகசியமாக வைக்கப்பட்டிருந்த விஜயின் மெர்சல் படத்தின் கதை கசிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் விஜயின் 61வது படமாக பிரம்மாண்ட பொருட்செயலரில் தயாராகி இருக்கிறது மெர்சல். முதல்முறையாக இந்தப் படத்தில் விஜய் மூன்று பாத்திரங்களில் நடித்துள்ளார். சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். வடிவேலுவும் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமை