
பழங்குடி பெண்களை கவர்ந்த திமுக ஊராட்சி சபை கூட்டம்! மக்களை ஈர்க்கும் மும்மூர்த்திகள்!!
கொல்லிமலை பழங்குடி மக்களிடையே
பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது
திமுகவின் ஊராட்சி சபைக்கூட்டங்கள்.
திமுக தேர்தல் பொறுப்பாளர்களின்
ஜனரஞ்சகமான பேச்சுகள், பழங்குடி
கிராமங்களில் ரொம்பவே எடுபட்டதால்
அவர்களை கட்சிக்காரர்களாக
மாற்றும் பணிகளிலும் இறங்கி
இருக்கிறது, திமுக.
மக்களை நோக்கி அரசியல் கட்சிகள் பயணிக்க வேண்டும் என்ற நோக்கில் திமுக முன்னெடுத்துள்ள ஊராட்சி சபைக்கூட்டங்களுக்கு நாளுக்குநாள் வரவேற்பு கூடி வருகிறது. குறிப்பாக, நாமக்கல் மக்களவை தொகுதியில் இதுவரை திமுக தொடங்கப்பட்டதில் இருந்தே செல்லாத இடங்களை எல்லாம் தேடித்தேடிச் செல்கின்றனர், அத்தொகுதி பொறுப்பாளர்கள். இதுவரை வராதவர்கள் தேடி வருகிறார்கள் என்ற பேராவலோ என்னவோ திமுகவினரே எதிர்பார்க்காத ரிசல்ட் மலைக்கிராமங்களில் கிடைத்திருக்கிறது என்கிறார்கள் உடன்பிறப்புகள்.
முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, முன்னாள் ...