Friday, October 17மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: rigid banknotes

ரூ.6 கோடி ரயில் கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை நெருங்கியது சிபிசிஐடி! #TrainRobbery #Salem

ரூ.6 கோடி ரயில் கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை நெருங்கியது சிபிசிஐடி! #TrainRobbery #Salem

இந்தியா, குற்றம், சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சேலத்தில் இருந்து சென்னை சென்ற எக்மோர் எக்ஸ்பிரஸ் ரயிலில், வங்கிகளில் இருந்து கொண்டு செல்லப்பட்ட ரூ.5.78 கோடி ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளை அடித்த சம்பவத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த முக்கிய குற்றவாளிகளை சிபிசிஐடி போலீசார் நெருங்கிவிட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. பொதுத்துறை வங்கிகளில் சேகரமாகும் பழைய மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட இடைவெளியில் திரும்பப் பெற்றுக்கொள்வது நடைமுறையில் இருந்து வருகிறது. அதன்படி, சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட சில பொதுத்துறை வங்கிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட ரூ.342.75 கோடி பழைய, கிழிந்த ரூபாய் நோட்டுகளை சேலத்தில் இருந்து சென்னை செல்லும் எக்மோர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டது.   இதைத் தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி, ரூ.342.75 கோடியை 226 அட்டைப...