Monday, September 22மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: ponmudi

‘எவ்வளவோ செஞ்சிருக்கேன்… ஆனா அந்த மாஜி எம்.பி., கண்டுக்கவே இல்ல…!’ – துணைவேந்தர் புலம்பல்!!

‘எவ்வளவோ செஞ்சிருக்கேன்… ஆனா அந்த மாஜி எம்.பி., கண்டுக்கவே இல்ல…!’ – துணைவேந்தர் புலம்பல்!!

சேலம், முக்கிய செய்திகள்
சேலத்தில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு எப்போது பெரியார் என்ற கலகக்காரரின் பெயரைச் சூட்டினார்களோ அப்போது முதல் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. வாழ்நாளெல்லாம் சாதி ஒழிப்பிற்காகப் போராடி வந்த பெரியாரின் பெயரில் அமைந்த பல்கலையில் குறிப்பிட்ட சில சாதிகளின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது. திமுக, அதிமுக எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும் சாதியவாதம் மேலோங்கி இருக்கிறது. குறிப்பாக, கடந்த பத்து ஆண்டுகளில் கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுவாமிநாதன், குழந்தைவேல், ஜெகநாதன் ஆகியோர் அடுத்தடுத்து துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் குழந்தைவேல், ஜெகநாதன் ஆகிய இருவரும் ஆர்எஸ்எஸ் பின்புலத்தோடு துணைவேந்தர் ஆனவர்கள் என்ற பேச்சும் உண்டு. இப்போதைய துணைவேந்தர் ஜெகநாதன், கடந்த 2021ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி பெரியார் பல்கலையில் பொறுப்பேற்றார். அவரின் பதவிக்காலம் கடந்த ஜூன் ...
‘வாய்தா ராணி’, ‘ஓசி பயணம்…’ வாய்த்துடுக்கால் வீழ்ந்த பொன்முடி

‘வாய்தா ராணி’, ‘ஓசி பயணம்…’ வாய்த்துடுக்கால் வீழ்ந்த பொன்முடி

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விழுப்புரம்
ஜெயலலிதாவை வாய்தா ராணி என்றும், பெண்களுக்கான இலவச பேருந்துப் பயணத்தை ஓசி பயணம் என்றும் பொதுவெளியில் வாய்த்துடுக்கு காட்டிய அமைச்சர் பொன்முடிக்கு, சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை என்பதை சொந்தக் கட்சியினரே ரசிக்கின்றனர். தமிழகத்தில் தந்தை பெரியார் மீது ஈர்ப்பு கொண்டவர்கள், பேரறிஞர் அண்ணா, திராவிடர் முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கிய பிறகு அக்கட்சியை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். அப்படி பெரியாரிய பட்டறையில் இருந்து திமுகவுக்குள் காலடி வைத்தவர்தான் பேராசிரியர் பொன்முடி. பொதுமேடை, அரசியல் மேடை என எந்த மேடயாக இருந்தாலும் திராவிட சித்தாந்தங்களைப் பேசாமல் இருக்கவே மாட்டார். அந்தளவுக்கு திராவிட சிந்தனைகளில் ஊறிப்போனவர். திராவிட இயக்கத்தின் மீது பொன்முடி கொண்ட சித்தாந்த பிடிப்பைச் சுட்டிக்காட்ட, அவர் எழுதிய, 'The Dravidian Movement and the Black Movement' என்ற ஒரு புத்தகமே போதுமானது....
சொத்துக்குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை; உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சொத்துக்குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை; உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விழுப்புரம்
சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவருடையய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் டிச. 21ம் தேதி பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. இருவரும், விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைய 30 நாள்கள் அவகாசமும் வழங்கி உத்தரவிட்டுள்ளது. திமுகவின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான க.பொன்முடி, தற்போது தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக உள்ளார். இவர், கடந்த 2006 - 2011 வரையிலான திமுக அமைச்சரவையில் உயர்கல்வி மற்றும் கனிமவளத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, வருமானத்திற்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது கடந்த 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில், விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு ...