இந்தியாவுக்கு ராணுவ ஆட்சிதான் வேண்டுமாம்!: சர்வே சொல்லுது
இந்தியாவில் ஜனநாயக ஆட்சி மீது திருப்தி இருந்தாலும், ராணுவ ஆட்சி வந்தால்தான் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று அதிர்ச்சிகரமான எண்ணங்களை இந்தியர்கள் வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த 'பியூ ரிசர்ச்', 38 நாடுகளில் 41955 பேரிடம் ஓர் ஆய்வை நடத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 16ம் தேதி முதல் மே 8ம் தேதி வரை இந்த ஆய்வை நடத்தி முடித்திருக்கிறது. இதில், இந்தியர்களின் மனவோட்டம் பற்றிய சில அதிர்ச்சிகரமான, அதேநேரம் ஆச்சர்யகரமான தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்தியாவில், கடந்த 2012ம் ஆண்டு முதல் தற்போது வரை சராசரியாக 6.9 சதவீதம் பொருளாதார வளர்ச்சி இருந்து வருவதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள 5ல் நான்கு பேர், அரசு மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும், இருப்பினும் ராணுவ ஆட்சி வந்தால் நல்லது என்றும் பெரும்பான்மையோர் கருதுவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, ஆதார் ...