பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்!
சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், ஒரு மாத காலம் பரோலில் விடுதலை செய்யப்பட்டார். இன்று மாலை அவர், வேலூர் சிறையில் இருந்து விடுதலை ஆனார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, 1991-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் உடந்தையாக இருந்ததாக பேரறிவாளன் உள்ளிட்ட சிலருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 26 ஆண்டுகளாக பேரறிவாளன், வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையை காண்பதற்கு பரோலில் விடுவிக்கும்படி, பேரறிவாளன் கோரிக்கை விடுத்திருந்தார். அவருடைய தாயார் அற்புதம்மாளும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
அவரது கோரிக்கையை ஏற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி , பேரறிவாளனை ஒரு மாத காலம் பரோலில் விடுவிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையடுத்து, இ...