கமல் ட்வீட்: நிலவேம்பு குடிநீர் வேண்டாம்!
நிலவேம்பு குடிநீர், டெங்கு காய்ச்சலை தடுக்கும் என்பதற்கு ஆதாரப்பூர்வ ஆய்வு முடிவுகள் இல்லாததால், அதை விநியோகிப்பதை நிறுத்தி வைக்குமாறு நடிகர் கமல்ஹாசன் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கு சமூக வலைத்தளங்களில் ஆதரித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் இணையவாசிகள் கருத்துகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் பரவலாக டெங்கு காய்ச்சல் தாக்கம் இருந்து வருகிறது. சுமார் 12000 பேருக்கு மேல் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். டெங்கு காய்ச்சல், இன்ன பிற இனம் காண முடியாத காய்ச்சல் காரணமாக கடந்த சில மாதங்களில் 400க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். ஆனால், டெங்கு காரணமாக 40 பேர் மட்டுமே இறந்துள்ளதாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுளது.
இதற்கிடையே, நிலவேம்பு கஷாயம் குடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்படுவதாகவும், ரத்தத்தில் பிளேட்டிலெட் செல்கள் அதிகரிப்பதாகவ...