இது ஆண்கள் சமாச்சாரம் மட்டுமில்ல! ஆனால் வயது வந்தோர்க்கு மட்டுமானது!!
இந்தியா போன்ற புராதன நம்பிக்கைகளில் ஊறிப்போன நாடுகளில் காதல், திருமணம், குழந்தைப்பேறு, கலவி குறித்த சங்கதிகள் யாவுமே அளவுக்கு அதிகமாகவே புனிதமாக்கி வைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த புனிமாக்கும் போக்கு, ஒருவேளை சமூகத்தில் குற்றங்கள் பெருகி விடும் என்ற அச்சத்தினாலோ அல்லது அறியாமையினலோகூட இருக்கலாம். சொல்லப்போனால் அத்தகைய உணர்வுகள் புனிதங்களே அல்ல.
ஆனால் ஆண், பெண் உடலியலில் ஏற்படும் இயல்பான மாற்றங்களை பதின்பருவ சிறுவர், சிறுமிகளுக்கு கற்பிக்காமலே வந்திருப்பது ஆகப்பெரும் சமூகக் குற்றமாகத்தான் பார்க்கிறேன். அப்படியான ஒரு சங்கதி பற்றிதான் இப்போது பார்க்கப் போகிறோம்.
நடிகர் தனுஷின் முதல் படமான 'துள்ளுவதோ இளமை'யில், ஒரு காட்சியில் 'தலைவாசல்' விஜய், ''இந்த பசங்க பாத்ரூமுக்குள் போய் அப்படி ரொம்ப நேரமா என்னதான் பண்ணுவானுங்களோ...?'' என்று சலிப்புடன் கூறுவார். எல்லோருமே பதின்பருவக...