கிரிக்கெட்: இந்தியாவுக்கு மரண அடி கொடுத்தது இலங்கை!
தரம்சாலாவில் இன்று நடந்த முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார பெற்றி பெற்றது.
இந்தியா - இலங்கை கிரிக்கெட் அணிகள் மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி, ஹிமாச்சல்பிரதேச தலைநகர் தரம்சாலாவில் இன்று (டிசம்பர் 10, 2017) நடந்தது. பகலிரவு ஆட்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும், பனிப்பொழிவு காரணமாக பகல் 11.30 மணிக்கே போட்டி தொடங்கியது.
இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி ஓய்வில் சென்றதால், ஒரு நாள் தொடருக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். ரஹானே நீக்கப்பட்டு ஸ்ரேயாஸ் அய்யர் முதன்முதலாக ஆடும் லெவனில் இடம் பிடித்தார்.
டாஸ் வென்ற இலங்கை கேப்டன் திசாரா பெரேரா, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது....