Saturday, April 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: New Delhi

முதல் ட்வென்டி-20; நியூஸிலாந்தை புரட்டி எடுத்தது இந்தியா!

முதல் ட்வென்டி-20; நியூஸிலாந்தை புரட்டி எடுத்தது இந்தியா!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ட்வென்டி - 20 கிரிக்கெட் போட்டியில், அந்த அணியை இந்தியா துவம்சம் செய்து, 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ட்வென்டி-20 கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று (நவம்பர் 1, 2017) நடந்தது. இரவு 7 மணிக்கு போட்டி துவங்கியது. இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஆஷிஸ் நெஹ்ரா இன்றைய போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். இதை கவுரவிக்கும் விதமாக அவருக்கு இந்த ஆட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதேபோல் இளம் வீரரான ஸ்ரேயாஸ் அய்யர், முதன்முதலாக சர்வதேச ட்வென்டி - 20 கிரிக்கெட்டில் அறிமுக வீரராக களம் இறங்கினார். தவான் - ரோஹித் அபாரம்: டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், தனது அணி முதலில் பந்து வீச அழைத்தார். போல்ட், டிம் சவுத்
பெண்ணுக்கு பாதுகாப்பான தேசமா இந்தியா?

பெண்ணுக்கு பாதுகாப்பான தேசமா இந்தியா?

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள்
இந்திய உயர்நீதிமன்றங்களில் மட்டும் 137458 பாலியல் வல்லுறவு வழக்குகள் இன்னும் விசாரணை நிலையிலேயே இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுக்கணக்கில் நீடிக்கும் விசாரணைகளால், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி கிடைக்காமல் போகக்கூடும். இதன் தீவிரம் தெரியாமல் இந்திய நீதிமன்றங்களும், அரசும் பரிபாலனம் நடத்துவது, இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறது. தேரா சச்சா சவுதா ஆசிரம பெண் சீடர்கள் இருவரை, அதன் தலைவர் குர்மீத் ராம் ரஹீம்சிங் பாலியல் வல்லுறவு செய்ததாக 2002ல் புகார் பதிவு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்தே தண்டனை கிடைத்திருக்கிறது. தாமதமான நீதி என்றாலும், பசுத்தோல் போர்த்திய சாமியார்களுக்கு சரியான சவுக்கடியாகத்தான் இந்த தண்டனை அமைந்திருக்கிறது. 20 ஆண்டுகள் சிறை, நிச்சயம் கடுமையான தண்டனைதான். ஆனால், தாமத