Wednesday, October 15மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Keezhadi

உய்வில்லை தமிழ் கொன்ற மகற்கு! ஊடகங்களில் வதைபடும் தாய்மொழி!!

உய்வில்லை தமிழ் கொன்ற மகற்கு! ஊடகங்களில் வதைபடும் தாய்மொழி!!

சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
மொழி, இனம், பண்பாடு ஆகிய மூன்றும் மனித குலத்தின் பரிணாம வளர்ச்சிக் கூறுகள் ஆகும். மொழி செழுமை அடையும்போது அங்கு இனமும், பண்பாடும், கலாச்சாரமும் மேலும் செழுமை அடைகிறது. எங்கே, ஒரு மொழி அழிந்து போகிறதோ அங்கே ஓர் இனம் அழிவுக்கு உள்ளாகிறது. மொழி, கலாச்சார ரீதியாகமனிதனை ஓர்மைப்படுத்துகிறது.பழமையான மொழிகளுள்ஒன்றான சீனம், உலகம் முழுவதும்110 கோடிக்கும் மேற்பட்டமக்களால் பேசப்படுகிறது.ஆங்கில மொழியை 150 கோடிக்கும்மேற்பட்டோர் பேசுகின்றனர்.தொன்மையான தமிழ் மொழியை,உலகளவில் 10 கோடிபேர் பேசுகிறார்கள்.ஆக, இப்போதைக்குதமிழ் மொழி அழிந்து விடுமோஎன்ற கவலை தேவையற்றது.என்றாலும், அழியக்கூடியமொழிகளுள் தமிழ் 8ஆவதுஇடத்தில் இருப்பதாக யுனெஸ்கோசொல்கிறது கூர்ந்து நோக்கவேண்டியதாகிறது. பிற செவ்வியல் மொழிகளோடுஒப்பு நோக்கும்போது, தமிழைப் போலசெறிவான இலக்கண, இலக்கிய வளம்கொண்ட வேறு மொழிகள்உலகில் இல்லை. நம்முடையதமிழ் ச...
கீழடி அகழாய்வு ஏன் தொடர வேண்டும்?

கீழடி அகழாய்வு ஏன் தொடர வேண்டும்?

இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், சிவகங்கை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள், வரலாறு
சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது கீழடி கிராமம். தமிழகத்தின் குக்கிராமங்களில் ஒன்றாக கீழடியை நாம் கடந்து போய்விட முடியாது. அங்கேதான், பழந்தமிழரின் அரிய ரகசியங்கள் ஒளிந்திருக்கின்றன. கடந்த 2015ம் ஆண்டில் இருந்து கீழடி கிராமத்தில் மைய அரசின் தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக 110 ஏக்கர் பரப்பளவு நிலத்தை மைய அரசு கையகப்படுத்தியது. இரண்டு கட்ட ஆய்வு நடந்த நிலையில், திடீரென்று தொல்லியல் துறையினர் பாதியிலேயே மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு கிளம்ப, வரலாற்று ஆய்வாளர்கள், அரசியல் கட்சியினரிடம் இருந்து அப்போது கடும் கண்டனங்கள் எழுந்தன. ஒருவழியாக உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கின. ஒரு கட்ட அகழாய்வு என்பது ஓர் ஆண்டில் குறைந்தபட்சம் 10 மாதங்களாவது நடத்தப்பட வேண்டும். ஆனால், ஆறே மாதத்தில் திடீரென்று ஆய்வுப்பணிகள் முடிந்ததாகக்கூறி...