Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Kafeel Khan humanist

கஃபீல்கான் என்கிற மனிதநேயர்!

கஃபீல்கான் என்கிற மனிதநேயர்!

இந்தியா, முக்கிய செய்திகள்
உத்தர பிரதேசத்தில், அரசு மருத்துவர் ஒருவரின் மனிதநேயமிக்க முயற்சியால் பல குழந்தைகளின் உயிர்கள் பலியாகாமல் காப்பாற்றப்பட்டுள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன. கோரக்பூர். பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. மூளைவீக்க நோயால் 60 குழந்தைகள் இறந்தது இங்கேதான். குழந்தை நல மருத்துவர் ஒருவர் மூளைவீக்க சிகிச்சைப் பிரிவின் தலைவருமாக இருக்கிறார். 10ஆம் தேதி இரவு. ஆக்சிஜன் குறைபாட்டால் அபாய எச்சரிக்கை பீப் சத்தம் ஒலிக்கிறது. அவசர கால சிலிண்டர்களைப் பயன்படுத்தி ஆக்சிஜன் சப்ளை தடைபடாமல் பார்த்துக்கொள்ளலாம் என்பது மருத்துவருக்கும் ஊழியர்களுக்கும் தெரியும். ஆனால் இது இரண்டு மணி நேரத்துக்குத்தான் தாங்கும். அதற்குப் பிறகு? மூளைவீக்க நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆக்சிஜன் தடையின்றித் தேவை, அதுதான் அவர்களின் உயிர்காக்கும் மருந்து. இதுவும் அந்த மருத்துவருக்கு நன்றாகத் தெரியும். ஆக்