Thursday, December 5மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Judgments

தண்டனைக்கு தப்பிய குற்றவாளிகள்! தீர்ப்புகள் திருத்தப்படலாம்!!

தண்டனைக்கு தப்பிய குற்றவாளிகள்! தீர்ப்புகள் திருத்தப்படலாம்!!

சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் (63), நாடறிந்த வழக்கறிஞர் மட்டுமல்ல; மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக இருந்த வழக்கறிஞர் சாந்தி பூஷணின் மகன்களுள் ஒருவரும்கூட. பொதுநல வழக்குகளில் எப்போதும் ஆர்வம் செலுத்தி வரும் பிரசாந்த் பூஷண், மனதில் பட்டதை அப்பட்டமாகப் பேசிவிடக் கூடியவர். அவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே பற்றி, கடந்த ஜூன் 27, 2020ல் ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை வெளியிட்டு இருந்தார். அதில், கொரோனா காலத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கையாண்ட விதம், விசாரணை நடத்திய முறை குறித்தும், பீமா கோரேகான் வழக்கில் கைதாகியுள்ள சமூக செயல்பாட்டாளர்கள் வரவரராவ், சுதா பரத்வாஜ் ஆகியோருக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாததையும், நீதிபதிகள் அதைக் கண்டிக்காமல் இருப்பதையும் கேள்விக்கு உட்படுத்தி இருந்தார். ...