Saturday, December 14மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: jagannathan

சேலம் பெரியார் பல்கலை புதிய துணைவேந்தராக ஜெகன்நாதன் நியமனம்! தொடரும் ‘ஜி’ சென்டிமென்ட்!

சேலம் பெரியார் பல்கலை புதிய துணைவேந்தராக ஜெகன்நாதன் நியமனம்! தொடரும் ‘ஜி’ சென்டிமென்ட்!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் பெரியார் பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை முன்னாள் டீன் ஜெகன்நாதன் நியமிக்கப்பட்டு உள்ளார். தொடர்ந்து மூன்றாவது முறையாக கொங்கு மண்டலத்தில் இருந்தும், கவுண்டர் சமூகத்தினரையே துணை வேந்தராக நியமிக்கப்பட்டிருப்பது யதார்த்தமா? அல்லது உள்நோக்கமா? என்ற விவாதமும் பல்கலை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தராக இருந்து வந்த பேராசிரியர் குழந்தைவேலுவின் பதவிக்காலம் கடந்த ஜன. 8ம் தேதியுடன் முடிவடைந்தது. எனினும், புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும்வரை அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.   பல்கலை விவகாரங்களில் வேந்தர் என்ற முறையில் ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் இருப்பதை மறுக்க முடியாது. என்றாலும், பணி நிறைவு பெற்று, வழியனுப்பு விழா நடத்தப்பட்ட நிலையில் குழந்தைவேலுவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டதும்...