Tuesday, December 3மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: humanity

நம்ம ஊர் நாயகி: சீதா தேவிகளால் தழைக்கிறது மனிதநேயம்!

நம்ம ஊர் நாயகி: சீதா தேவிகளால் தழைக்கிறது மனிதநேயம்!

சென்னை, சேவை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
வாழ்வில் ஏற்படும் கொடுந்துயரங்களும், எதிர்பாராத இடர்களும்தான் சாதாரண மனிதர்களைக் கூட அசாதாரண செயல்களைச் செய்யக்கூடிய நாயகர்களாக உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கொரோனா என்னும் பேரிடர், இந்த உலகுக்கு மற்றுமொரு நாயகியை பரிசளித்திருக்கிறது. கொரோனா ஊரடங்கின்போது வேலை, வருவாய் இழந்து வயிற்றுக்கும் உயிருக்குமாய் தத்தளித்துக் கொண்டிருந்த சாமானியர்களுக்கு தன்னார்வலர்கள் பலர் உணவளித்தல், மருத்துவ உதவிகள், உணவுப்பொருள் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைச் செய்து வந்தனர். உலகில் இன்னும் மானுடம் மரித்துப் போய்விடவில்லை என்பதற்கு அத்தகைய தன்னார்வலர்களே தக்க சான்று. அவர்களைப் பற்றிய தகவல்களை நமது 'புதிய அகராதி'யில் 'நம்ம ஊர் நாயகன் / நாயகி' என்ற தலைப்பில் தொடராக எழுதி வருகிறோம். அந்த வரிசையில் இப்போது, சீதா தேவி.   சென்னை கொடுங்கையூர் மூலக்கடையைச் சேர்ந...
தமிழரின் அறுவை சிகிச்சைக்கு 11 லட்சம் வசூலித்து கொடுத்த கேரள மக்கள்; நெகிழ வைக்கும் சம்பவம்

தமிழரின் அறுவை சிகிச்சைக்கு 11 லட்சம் வசூலித்து கொடுத்த கேரள மக்கள்; நெகிழ வைக்கும் சம்பவம்

இந்தியா, தமிழ்நாடு, மதுரை, முக்கிய செய்திகள்
விபத்தில் சிக்கிய தமிழருக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததால் உயிரிழந்தபோது மனிதம் செத்துவிட்டதாக கேரள மக்கள் மீது விமர்சனம் எழுந்த நிலையில், அதே கேரள மக்கள் இன்னொரு தமிழரின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக ரூ.11 லட்சம் வசூலித்துக் கொடுத்து மனிதத்தை மீட்டெடுத்துள்ளனர். நெகிழ்ச்சியான நிகழ்வின் பின்னணி இதுதான்... மதுரையைச் சேர்ந்தவர் ஜெயன். இவருடைய மனைவி மாரியம்மாள். குடும்பத்துடன் கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டம் சிங்காவனம் என்ற கிராமத்தில் வசிக்கிறார். அவர் கேரளாவில் குடியேறி கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஜெயன், இஸ்திரி (அயனிங்) கடை வைத்திருக்கிறார். சிங்காவனம் மற்றும் பல்லம் கிராம மக்கள் தங்கள் உடைகளை ஜெயனிடம் கொடுத்துதான் இஸ்திரி செய்து வருகின்றனர். பெரும்பாலும் ஜெயனே, வீடு வீடாகச் சென்று துணிகளை பெற்றுக்கொண்டு வந்து இஸ்திரி செய்து தருவதை வழக்கமாக வைத்திருந்தார். இதனால் அவர் அந்த ...