Saturday, December 14மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: former prime minister

தண்டனை தீர்ப்பை திரும்பப்பெற வேண்டும்!: பேரறிவாளன் புதிய மனு

தண்டனை தீர்ப்பை திரும்பப்பெற வேண்டும்!: பேரறிவாளன் புதிய மனு

அரசியல், இந்தியா, காஞ்சிபுரம், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை திரும்பப்பெற வேண்டும் என்று கோரி பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு பிப்ரவரி 21 ஆம் தேதிக்குள் சி.பி.ஐ பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1991-ஆம் ஆண்டு மே மாதம் 21-ஆம் தேதி சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் பிரச்சாரத்திற்கு வந்திருந்தபோது ராஜிவ் காந்தி மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயகுமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் தண்டிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். ராஜிவ் காந்தி கொலை வழக்கில், வெடிகுண்டு தயாரிக்கும் சதித்திட்டத்தில் உடந்தையாக இருந்தார் என்பதே பேரறிவாளன் மீது குற்றம் சாட்டப்பட்டது. நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரி தியாகராஜன் ஒரு பிராமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார். ...
“சிதம்பரம்னா சும்மா கூப்பிட்டு கலாய்க்கிற  ஹெச்.ராஜானு நினைச்சியா…சிதம்பரம்டா…!” – ட்விட்டர் வறுவல்

“சிதம்பரம்னா சும்மா கூப்பிட்டு கலாய்க்கிற ஹெச்.ராஜானு நினைச்சியா…சிதம்பரம்டா…!” – ட்விட்டர் வறுவல்

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பாஜக மற்றும் அதன் ஆதரவு கட்சிகள், அமைப்புகள் மட்டுமே ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி மக்களிடமும் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. அதேநேரம் கருப்புப் பணம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. பாஜக அரசின் திட்டமிடப்படாத பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கண்டித்து, கடந்த 8ம் தேதி நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள கருப்பு தினம் கடைப்பிடித்தது. அதற்கு போட்டியாக களமிறங்கிய பாஜக, அன்றைய தினத்தை கருப்புப்பண ஒழிப்பு தினமாகக் கொண்டாடியது. முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை சட்டப்பூர்வ கொள்ளை என்றும் திட்டமிட்ட மோசடி என்றும் கடுமையாக வர்ணித்தார். முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரமும், பாஜக அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், கடந்த 11 தே...