தோல்விகளும் சுகமானவைதான்..! – தில்லைக்கரசி நடராஜன் எழுதும் தன்னம்பிக்கை தொடர்
-தில்லை தர்பார்-
பெண்கள் முன்னேற்றம்
என்பது ஆண்களுக்கு எதிரான
போர்க்கொடியா?
இல்லையில்லை.
பெண்கள் கல்வி, தொழில்,
பொருளாதாரம், அரசியல்
போன்ற எல்லா
விஷயங்களிலும்
சுய முன்னேற்றம் பெற்று
குடும்பத்தையும்,
சமுதாயத்தையும்
மேம்படுத்துவதுதான்
பெண்கள் முன்னேற்றம்.
எனதருமை தோழிகளே...
தோற்றுப்போங்கள்.
ஆச்சரியமாக உள்ளதா?
நீங்கள் ஒவ்வொரு முறையும்
தோற்கும் போதெல்லாம்
மனது வலிக்கும்; ஆனாலும்,
தோல்விகளில் இருந்து
கற்றுக்கொண்ட அனுபவ
பாடங்கள், அடுத்தடுத்த
புதிய முயற்சிகளில் ஈடுபட
போதுமான தைரியத்தையும்
தன்னம்பிக்கையையும்
அளிக்கும்.
ஒருவேளை, நீங்கள்
தோற்காமலே போயிருந்தால்
உங்கள் வாழ்க்கையில் பல
விஷயங்களை கற்றுக்கொள்ள
வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.
தோல்விகளும்கூட
சுகமானவைதான்.
தோற்றுப்போய் அதிலிருந்து
மீண்டு வெளிவரும்போது
உங்களில் ஒரு புதிய
மாற்ற...