நாடி, நரம்பு, புத்தி என கொலைவெறி ஊறிக்கிடக்கும் தஷ்வந்த்!: திடுக்கிடும் வாக்குமூலம்
சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை, பணத்திற்காக தாய் படுகொலை என அடுத்தடுத்த குற்றத்தில் ஈடுபட்டு வந்த தஷ்வந்த், பெற்ற தந்தையையும் கொலை செய்ய திட்டமிட்டு இருந்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை போரூரில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த பிப்ரவரி மாதம், 7 வயதே ஆன ஹாஸினி என்ற சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கொல்லப்பட்டாள். சந்தேகம் வராமல் இருக்க, சடலமும் எரிக்கப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் என்ற இளைஞர், குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.
பின்னர் பிணையில் வெளியே வந்த அவர், பெற்ற தாயென்றும் பாராமல் பணம் நகைக்காக தாய் சரளாவை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துவிட்டு மும்பைக்குக் தப்பி ஓடினார்.
சூதாட்ட பிரியரான தஷ்வந்த், மும்பையில் குதிரை பந்தயம், சீட்டாட்டம் என்று பொழுதைக் கழித்து வந்த நிலையில், தமிழக தனிப்படை காவல்துறையினரால்...