Saturday, April 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: fail

கிரிக்கெட்: இந்தியா போராடி தோல்வி; ஆஸி., முதல் வெற்றியை சுவைத்தது

கிரிக்கெட்: இந்தியா போராடி தோல்வி; ஆஸி., முதல் வெற்றியை சுவைத்தது

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி கடுமையாக போராடினாலும் தோல்வியைத் தழுவியது. தொடர் தோல்வியால் துவண்டு போயிருந்த ஆஸ்திரேலியா, முதல் வெற்றியை பதிவு செய்தது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலும், மூன்று டி-20 போட்டிகளிலும் விளையாடுகிறது. ஒருநாள் தொடரை ஏற்கனவே இந்திய அணி 3-0 கணக்கில் வென்று உள்ளது. இருப்பினும், 5 போட்டிகளிலும் ஆஸி.,யை வீழ்த்த வேண்டும் என்று முனைப்புடன் இந்தியாவும், எப்படியும் இந்தப் போட்டியில் வென்று காட்டி, தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற வெறியுடன் ஆஸி., அணியும் நேற்று (செப். 28) நான்காவது ஒரு நாள் போட்டியில் களமிறங்கின. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் போட்டி நடந்தது. உள்ளே - வெளியே: இந்திய அணியில் இதுவரை களமிறங்காத வீரர்களுக்கு வாய்ப்பு அள
அனிதா: கடைசி பலியாக இருக்கட்டும்!

அனிதா: கடைசி பலியாக இருக்கட்டும்!

அரியலூர், கல்வி, தமிழ்நாடு, திருச்சி, முக்கிய செய்திகள்
நீட் தேர்வில் தோல்வி, கலைந்து போன மருத்துவப் படிப்பு என விரக்தியின் உச்சத்தில் இன்று (செப்.1) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அனிதாவே, நீட் அரக்கனுக்கு கடைசி பலியாக இருக்க வேண்டும். தரகு அரசியலில் கரைந்து போன இளம் மாணவியின் மரணம், தமிழகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. அனிதா. 17 வயதே ஆன இளம் மாணவி. மனசு முழுக்க மருத்துவக் கனவுகளைச் சுமந்து கொண்டு இருந்தார். படிப்பு ஒன்று மட்டும்தான் தன்னையும், குடும்பத்தையும் நல்ல நிலைக்கு கொண்டு செல்லும் என்பதில் நம்பிக்கையாக இருந்தார். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் என்ற சின்னஞ்சிறிய கிராமத்தில் இருந்து எதிர்காலத்தில் நமக்கு கிடைத்திருக்க வேண்டிய திறமையான மருத்துவர் இன்று உயிருடன் இல்லை. தற்கொலை, மன அழுத்தம், இருதய துடிப்பு நின்றது என பிரேத பரிசோதனை அறிக்கை என்ற பதத்தில் சொன்னாலும், அனிதாவின் பலிக்கு முதல் குற்றவாளி தரகர் ஆட்சி