Monday, September 22மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Executive engineer

அரங்கேறிய கூட்டுக்களவாணித்தனம்: சிக்கப்போகும் ஐஏஎஸ்; கிலியில் பொறியாளர்கள்

அரங்கேறிய கூட்டுக்களவாணித்தனம்: சிக்கப்போகும் ஐஏஎஸ்; கிலியில் பொறியாளர்கள்

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாநகராட்சியில் ஐஏஎஸ் அதிகாரி, பொறியாளர்கள், அமைச்சுப் பணியாளர்கள் கூட்டாக நடத்திய பணி நியமன ஊழல் விவகாரத்தில் அவர்களின் ஒட்டுமொத்தத் தலைகளும் உருளப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி பொறியியல் பிரிவில், ஸ்கில்டு அசிஸ்டன்ட் (கிரேடு - 2) எனப்படும் இரண்டாம் நிலை செயல்திறன் உதவியாளர் காலியிடங்கள் கடந்த 2022ம் ஆண்டு நிரப்பப்பட்டது. இந்தப் பிரிவில் மொத்தம் 6 காலியிடங்கள் இருந்தன. இதற்காக, 9.12.2022ம் தேதி நேர்காணல் நடந்தது. மொத்தம் 55 பேர் நேர்காணலில் கலந்து கொண்டனர். குறைந்தபட்சக் கல்வித்தகுதி ஐ.டி.ஐ. படிப்பில் தேர்ச்சி என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இப்பணிக்கான ஊதிய விகிதம் 19500 - 62500 ரூபாய். குறைந்தபட்ச கல்வித்தகுதி, நல்ல சம்பளம், உள்ளூரிலேயே வேலை என்பதால், 6 செயல்திறன் உதவியாளர் பணியிடங்களையும் சேலம் மாநகராட்சியில் பணியாற்றும் ஊழியர்களும், ஆளும்...
அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 2 சிறுமிகள் பலி: அலட்சியத்தால் இரையான அவலம்!

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 2 சிறுமிகள் பலி: அலட்சியத்தால் இரையான அவலம்!

சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சென்னை கொடுங்கையூர் ஆர்ஆர் நகரில், அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த இரண்டு சிறுமிகள் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக பலியாயினர். சிறுமிகள் பலி: சென்னை கொடுங்கையூர் ஆர்ஆர் நகரைச் சேர்ந்த பாவனா (11), யுவஸ்ரீ (10) ஆகியோர் அங்குள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தனர். வடகிழக்கு பருவமழை காரணாக அப்பகுதியில் பள்ளிக்கு இன்று (நவம்பர் 1, 2017) விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதனால் இரண்டு சிறுமிகளும் இன்று மதியம் வீடு அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். தெருவோரம் இருந்த மின்பெட்டியில் (Electricity Piller Box) இருந்து ஒரு மின்சார கம்பி அறுந்து மண் தரையில் நீண்டு கிடந்தது. அதை அறியாமல் மதித்த சிறுமிகள், மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டனர். இருவரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியாயினர். அவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த மற்றொரு சிறுமி மின்சாரம் பாய்ந்ததில் பலத்த கா...