Sunday, December 7மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Edappadi Palaniasami

சேலம் அதிமுக மாவட்ட செயலாளர் நீக்கம் ஏன்? பரபரப்பு பின்னணி!

சேலம் அதிமுக மாவட்ட செயலாளர் நீக்கம் ஏன்? பரபரப்பு பின்னணி!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியில் இருந்து முன்னாள் எம்எல்ஏ ஜி.வெங்கடாசலம், திடீரென்று நீக்கப்பட்டதன் பின்னணியில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிமுகவில், சேலம் மாநகர்மாவட்டச் செயலாளராகஇருந்தவர் ஜி.வெங்கடாசலம்.8 ஆண்டுக்கும் மேலாக இந்தப்பதவியில் இருந்து வந்தார்.எடப்பாடியின் தீவிர விசுவாசியாகஅறியப்பட்ட இவர்,கடந்த ஜன. 28ம் தேதி,திடீரென்று மா.செ. பதவியில்இருந்து கட்டம் கட்டப்பட்டார்.அத்துடன், கொள்கை பரப்புதுணைச் செயலாளர் என்ற'டம்மி' பதவியில் நியமிக்கப்பட்டார். ஜி.வெங்கடாசலம் சூட்டோடு சூடாக,அனைத்துலக எம்ஜிஆர் மன்றதுணைச்செயலாளர் எம்.கே.செல்வராஜ்,சேலம் சூரமங்கலம் பகுதி செயலாளர்ஏ.கே.எஸ்.எம்.பாலு ஆகியஇருவரையும் சேலம் மாநகர்மாவட்ட பொறுப்பாளர்களாகநியமித்திருக்கிறார்எடப்பாடி பழனிசாமி. மா.செ. பதவியில் இருந்துவெங்கடாசலம் நீக்கப்பட்டதன்பின்னணி குறித்து இலைக்கட்சியின்மூத்த ந...
மக்களுக்காக ஜமீன் சொத்துகளை வாரி வழங்கிய ‘வாழும் அதிசயம்’ காளியண்ணன்!

மக்களுக்காக ஜமீன் சொத்துகளை வாரி வழங்கிய ‘வாழும் அதிசயம்’ காளியண்ணன்!

சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
பொதுவாழ்விலும், சொந்த வாழ்க்கையிலும் சுய ஒழுக்கமும், கட்டுப்பாடும் அருகிவிட்ட இக்காலத்திலும், தன்னுடைய ஜமீன் சொத்துகளை மக்களுக்காக வாரி வழங்கியதுடன், வாழ்நாளெல்லாம் மக்களுக்காகவே அர்ப்பணித்து பயன்மரமாய் பழுத்திருக்கிறார், டி.எம்.காளியண்ணன். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சிஹெச்பி காலனியில் வசிக்கிறார், டி.எம்.காளியண்ணன் (101). மனைவி, பார்வதி (90). ஜன. 10ம் தேதி, அவருடைய 101வது பிறந்த நாளை குடும்பத்தினர், சுற்றமும் நட்பும் சூழ கோலாகலமாக கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். இரண்டு மகன்கள்; மூன்று மகள்கள்; 16 பேரன் பேத்திகள்; 8 கொள்ளுப்பேரன் பேத்திகள் என ஆலமரமாய் விழுதுவிட்டிருக்கிறார்.   முதுபெரும் சுதந்திரப்போராட்டத் தியாகி, பழுத்த காங்கிரஸ்காரர், மஹாத்மா காந்தி, கர்ம வீரர் காமராஜர், மூதறிஞர் ராஜாஜி, தீரர் சத்தியமூர்த்தி, பெரியவர் பக்தவச்சல...
ஜெயலலிதா மரணம்: மாஜி நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன்

ஜெயலலிதா மரணம்: மாஜி நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன்

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும், விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, உடல்நலக்குறைவால் கடந்த 2016ம் ஆண்டு செப். 22ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 75 நாள்கள் தீவிர சிகிச்சையில் இருந்தார். சிகிச்சை பலனின்றி, கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இறந்தார். இதையடுத்து, உள்கட்சி பூசல்களால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அதிமுக இரண்டு அணிகளாக உடைந்தது. எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைய வேண்டுமெனில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட வேண்டும், சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து விலக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட்...
அதிமுக: முடிவுக்கு வருகிறது மன்னார்குடி ராஜ்ஜியம்?

அதிமுக: முடிவுக்கு வருகிறது மன்னார்குடி ராஜ்ஜியம்?

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அதிரடிகளால் அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட மன்னார்குடி கும்பலின் ராஜ்ஜியம் கூண்டோடு முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த நாளன்று தொடங்கிய 'பிரேக்கிங் நியூஸ்' ஜுரம், இன்னும் தமிழக மின்னணு ஊடகங்களை விட்டு அகலவே இல்லை. அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பூசல்கள் குறித்த செய்திகள்தான் ஒட்டுமொத்த ஊடகங்களையும் ஆக்கிரமித்து உள்ளன. நிரந்தர முதல்வர், நிரந்தர பொதுச்செயலாளர் என உச்சாணிக் கொம்பிலேயே ஜெயலலிதாவை வைத்து அழகு பார்த்த ரத்தத்தின் ரத்தங்கள்தான், அவர் மறைந்த பின்னர் சசிகலாவை 'சின்னம்மா' என்று வாஞ்சையோடு அழைத்தனர். அதிமுகவை காக்கும் ஒரே ரட்சகர் அவர்தான் என்று, சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்கியதும் இன்றைய முதல்வர், துணை முதல்வர் உள்¢ளிட்ட விசுவாசிகள்தான். 'இடத்தைக் கொடுத்தா...