
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: சாட்சிகள் விசாரணை ஜன. 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு!#Gokulraj #Day14
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் அரசுத்தரப்பு வழக்கறிஞர் மாற்றப்பட்டுள்ள நிலையில், சாட்சிகள் விசாரணையை ஜனவரி 10ம் தேதிக்கு தள்ளிவைத்து நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றம் இன்று (5.1.2019) உத்தரவிட்டுள்ளது.
ஆணவப்படுகொலை
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த சித்ராவின் மகன் கோகுல்ராஜ் (23). பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவர், திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் பி.இ. படிப்பை நிறைவு செய்திருந்தார்.
கடந்த 23.6.2015ம் தேதியன்று காலை வீட்டில் இருந்து பரமத்தி வேலூரைச் சேர்ந்த தனது நெருக்கமான தோழியான சுவாதியைக் காணச் சென்றிருந்தார். ஆனால் மறுநாள் மாலையில் (24.6.2015ம் தேதி) நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதியுடன் கோகுல்ராஜ் நெருங்கிப் பழகி வந்...