நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 23 நாள்தான் அவகாசம்!
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்னும் 23 நாள்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.
இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம். வருகிற 2020ம் ஆண்டு மே 3ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பம் பதிவு செய்யும் நடைமுறைகள் டிசம்பர் 2, 2019ம் தேதி தொடங்கியது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பதிவேற்றம் செய்ய கடைசி நாள், டிசம்பர் 31ம் தேதி ஆகும்.
நீட் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். அஞ்சல் வழியில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது. இதற்கென தொடங்கப்பட்டுள்ள தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளன. மாதிரி விண்ணப்பமும் வழங்கப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கு விண்ண...