Sunday, March 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: 39775

அதிகரிக்கும் மாணவர் தற்கொலைகள்!

அதிகரிக்கும் மாணவர் தற்கொலைகள்!

அரியலூர், இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சராசரியாக ஒரு மாணவர், உயிரை மாய்த்துக் கொள்வதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது தேசிய குற்ற ஆவணக் காப்பகம். ஆண்டுதோறும் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பிளஸ்-2வில் 196.5 கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெற்றும், நீட் தேர்வில் ஏற்பட்ட தோல்வி காரணமாக மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு, நாடு முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், தற்கொலையில் வீழ்வது அனிதா மட்டுமே அல்ல; இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஏதோ ஒரு மூலையில் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொள்வதாக கூறுகிறது, தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் அறிக்கை (2015). கடந்த 2015ம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 8934 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறுகிறது அந்த அறிக்கை. அதற்கு முந்தை...