Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: விசாரணை அதிகாரி

சேலம் ஜி.ஹெச்.: டாக்டர்களுக்குள் மோதல்! மர்ம நபர் மூலம் அறுவை சிகிச்சை; ஏழை நோயாளிகள் கதி என்ன?

சேலம் ஜி.ஹெச்.: டாக்டர்களுக்குள் மோதல்! மர்ம நபர் மூலம் அறுவை சிகிச்சை; ஏழை நோயாளிகள் கதி என்ன?

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
- சிறப்பு கட்டுரை -   சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், இருதய சிகிச்சை டாக்டர்களுக்குள் ஏற்பட்ட மோதலால் அந்த துறையையே இழுத்து மூடும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.   சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உள்ள இருதய நோய் சிகிச்சைத்துறையில், டாக்டர் கண்ணன் துறைத்தலைவராக உள்ளார். இவர் உள்பட டாக்டர்கள் குணசேகரன், முனுசாமி, தங்கராஜ், பச்சையப்பன், ஞானவேல், சுரேஷ்பிரபு ஆகிய ஏழு பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் டாக்டர் முனுசாமி மீது துறைத்தலைவர் கண்ணன் உள்பட ஆறு டாக்டர்களும் மருத்துவமனை டீன், மாவட்ட கலெக்டர், மருத்துவக்கல்வி இயக்குநர், சுகாதாரத்துறை செயலர் வரை புகார் மேல் புகார் தட்டிவிட்டுக் கொண்டே இருக்கின்றனர்.   ஒருகட்டத்தில், கைகலப்பு வரையிலும் சென்றதாக கூறும் பிற துறை மருத்துவர்கள், சேலம் அரசு மருத்துவமனையில் இப்போது கார்டியாலஜி டாக
விளை நிலங்களை பிடுங்குவதற்காக அரசு வேலையில் முன்னுரிமை… முதியோர் உதவித்தொகை… சுயதொழில் கடன்… தினுசு தினுசாக சரடு விடும் வருவாய்த்துறை!

விளை நிலங்களை பிடுங்குவதற்காக அரசு வேலையில் முன்னுரிமை… முதியோர் உதவித்தொகை… சுயதொழில் கடன்… தினுசு தினுசாக சரடு விடும் வருவாய்த்துறை!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
எட்டு வழிச்சாலைக்காக விளை நிலங்களை கையகப்படுத்துவதில் சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதில் முனைப்பு காட்டும் சேலம் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், விவசாயிகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை, முதியோர் உதவித்தொகை, பசுமை வீடு, சுயதொழில் கடனுதவி என தினுசு தினுசாக சரடு விட்டு வருகின்றனர். சென்னை - சேலம் எட்டுவழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலைக்காக சேலம் மாவட்டத்தில் அரியானூரில் தொடங்கி மஞ்சவாடி கணவாய் காப்புக்காடு வரை 248 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.   அரியானூர், உத்தமசோழபுரம், பூலாவரி, நாழிக்கல்பட்டி, நிலவாரப்பட்டி, மின்னாம்பள்ளி, சின்னக்கவுண்டபுராம், அயோத்தியாப்பட்டணம், மாசிநாயக்கன்பட்டி, குள்ளம்பட்டி, பருத்திக்காடு, குப்பனூர், ஆச்சாங்குட்டப்பட்டி உள்ளிட்ட 18 கிராமங்களின் வழியாக பசுமைவழி விரைவுச்சாலை அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்திற்காக விளை நிலங்களைக் க