Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: தணிக்கை

‘வசூல் சக்ரவர்த்திக்கு’ ஐஏஎஸ் பதவி உயர்வா?; கொதிப்பில் கூட்டுறவுத்துறை!

‘வசூல் சக்ரவர்த்திக்கு’ ஐஏஎஸ் பதவி உயர்வா?; கொதிப்பில் கூட்டுறவுத்துறை!

கடலூர், கரூர், கிருஷ்ணகிரி, குற்றம், சிறப்பு கட்டுரைகள், சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
கூட்டுறவு சங்கங்களிடம் டார்கெட் வைத்து வசூல் வேட்டை நடத்தும் தணிக்கைத்துறை அதிகாரிக்கு கன்ஃபெர்டு ஐஏஎஸ் ஆக பதவி உயர்வு வழங்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று கூட்டுறவுத்துறை பணியாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 4474 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சங்கங்கள் வாயிலாக அதன் உறுப்பினர்களுக்கு வேளாண் கடன், நகை அடகு கடன் போன்ற நிதிச்சேவைகளும், வேளாண்மைக்குத் தேவையான மானிய விலை உரம் உள்ளிட்ட இடுபொருள்களும் வழங்கப்படுகின்றன. தவிர, உறுப்பினர்களிடம் இட்டு வைப்பும் பெறப்படுகிறது. தனியாருக்கு கடும் சவால் அளிக்கும் வகையில் நகை அடகுக் கடன் வழங்குவதில் கூட்டுறவு சங்கங்கள் கொடிகட்டி பற க்கின்றன. இதுபோன்ற நிதிச்சேவைகள் நடைபெறுவதால், முறைகேடுகளைக் களையும் நோக்கில் ஒவ்வொரு கூட்டுறவு சங்கமும் ஆண்டுக்கு ஒருமுறை தணிக்கைக்கு
‘அவள்’ – சினிமா விமர்சனம்

‘அவள்’ – சினிமா விமர்சனம்

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சித்தார்த், ஆண்ட்ரியா, அதுல் குல்கர்னி மற்றும் பலரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இன்று (நவம்பர் 3, 2017) வெளியாகி இருக்கிறது 'அவள்'. உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இயக்கம்: மிலிந்த் ராவ்; இசை: கிரிஷ்; ஒளிப்பதிவு: ஸ்ரேயாஸ் கிருஷ்ணா; எடிட்டிங்: லாரன்ஸ் கிஷோர்; தயாரிப்பு: வயாகாம்18 மோஷன் பிக்சர்ஸ், ஏடாகி எண்டர்டெயின்மென்ட். புதுமணத் தம்பதிகளான சித்தார்த்தும், ஆண்ட்ரியாவும் ஒரு தனி வீட்டில் தங்கி இருக்கின்றனர். அவர்களுடைய வீட்டிற்கு அருகில், இன்னொரு குடும்பம் புதிதாக குடி வருகிறது. அந்த வீட்டில் உள்ள ஜென்னி என்ற இளம்பெண்ணுக்கு திடீரென்று பேய் பிடித்து விடுகிறது. அந்தப் பேய், மெல்ல மெல்ல சித்தார்த் வீட்டுக்குள் நுழைகிறது. அதன்பிறகு நாயகனும், நாயகியும் என்ன ஆனார்கள்? அவர்கள் அந்த பேயை விரட்டினார்
விஜய் பட விவகாரம்: வக்கீலை மெர்சலாக்கிய ஹைகோர்ட்!

விஜய் பட விவகாரம்: வக்கீலை மெர்சலாக்கிய ஹைகோர்ட்!

சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
மதுபானம், தீண்டாமை என்று எவ்வளவு பிரச்னை இருக்கும்போது அதையெல்லாம் விட்டுவிட்டு மெர்சல் படத்திற்கு தடை விதிக்க வழக்கு தொடர்ந்து, அந்தப்படத்திற்கு விளம்பரம் தேடித்தர வேண்டாம் என்று உயர்நீதிமன்ற நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில், ஜிஎஸ்டி வரி விதிப்பு, டிஜிட்டல் இந்தியா பற்றிய வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இது போன்ற வசனங்கள் இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதாகவும், அந்தப் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அஸ்வத்தாமன் என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு இன்று (அக்டோபர் 27, 2017) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கறிஞரிடம் பல கேள்விகளை எழுப்பியதோடு, கடும் கண்டனங்களையும் தெரிவித்தார். நாட்டுக்கு முக்கியமா? அப்போது நீதிபதி கூறுகையில், ''இந்திய அரசியலமைப்பிற்கு உட்பட்ட கருத்