Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: சாலை விபத்து

மாணவனின் சொந்த கருத்திற்கும் மதிப்பெண் உண்டு! பிளஸ்-2 தமிழ் வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம்!

மாணவனின் சொந்த கருத்திற்கும் மதிப்பெண் உண்டு! பிளஸ்-2 தமிழ் வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம்!

கல்வி, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பிளஸ்-2 பொதுத்தேர்வில், மாணவர்கள் பாடப்புத்தகத்தின் துணையின்றி தானாகவே சிந்தித்து எழுதும் வகையில் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டு இருந்தது, கல்வியாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறையில் நடப்புக் கல்வி ஆண்டில் (2019-2020) பிளஸ்-2 வகுப்பிற்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்காக, முன்னாள் பள்ளிக்கல்வித்துறை செயலர் உதயசந்திரன் தலைமையில் புதிய பாடங்களை எழுதுவதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழு, மெதுவாக கற்கும் மாணவர்கள் முதல் அதிபுத்திசாலி மாணவர்கள் வரை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு ஏற்றபடி புதிய பாடங்களை வடிவமைத்தது.   இந்த மாற்றமானது, மார்ச் 2ம் தேதி நடந்து முடிந்த பிளஸ்-2 பொதுத்தேர்வு தமிழ் வினாத்தாள் வடிவமைப்பிலும் எதிரொலித்தது. அதாவது, எல்லா வினாக்களுக்கும் பாடப்புத்தகத்தின் துணை கொண்டு விடை அளிக்க வேண்டிய தேவை இருக
40 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகளவில் சாலை விபத்தில் பலியாகின்றனர்!

40 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகளவில் சாலை விபத்தில் பலியாகின்றனர்!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
- சிறப்பு செய்தி -   சாலை விபத்துகளில் 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் அதிகளவில் பலியாகின்றனர் என்பது போக்குவரத்துத்துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.   தமிழகத்தில் சாலை கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் ஒருபுறம் கவனம் செலுத்தப்பட்டு வந்தாலும், வாகன விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளும் கணிசமாக அதிகரித்து வருவது போக்குவரத்துத்துறைக்கு கடும் சவாலாக விளங்குகிறது. சாலை விபத்துகளில், இந்திய அளவில் தமிழ்நாடு தொடர்ந்து முதல் மூன்று இடங்களுக்குள் வந்து விடுவது பெரும் சவாலாக உள்ளது. இதையடுத்து, சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்துவதில் போக்குவரத்துத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் ஒருங்கிணைந்து பல்வேறு ஆய்வுகளில் இறங்கியுள்ளனர்.   கடந்த 2017ம் ஆண்டில் மட்டும் தமிழகம் முழுவதும் நடந்த சாலை விபத்துகளில் 16157 பேர் பலியாகியுள்ளனர். தொடர் விழிப