Friday, October 17மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: எடப்பாடி பழனிசாமி

சேலம் மாணவி வளர்மதி இன்று விடுதலை!; ”மக்களுக்காக தொடர்ந்து போராடுவேன்!”

சேலம் மாணவி வளர்மதி இன்று விடுதலை!; ”மக்களுக்காக தொடர்ந்து போராடுவேன்!”

காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கைது செய்யப்பட்ட சேலம் மாணவி வளர்மதி, இன்று (ஜூலை 5, 2018) மாலை 3.45 மணிக்கு சேலம் பெண்கள் கிளைச்சிறையில் இருந்து நிபந்தனை ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். சேலத்தை அடுத்த ஆச்சாங்குட்டப்பட்டியில் கடந்த ஜூன் 19ம் தேதியன்று வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் சென்னை - சேலம் எட்டுவழி பசுமைச்சாலைக்கு நிலம் அளவிடும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.   இந்த திட்டத்துக்கு அப்பகுதி விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அவர்களின் அழைப்பின்பேரில் இயற்கை பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளரும், இதழியல் மாணவியுமான வளர்மதி (24), அங்கு சென்று விவசாயிகளிடம் பரப்புரை செய்தார்.   அப்போது அவர், ''நிலம் நம்முடைய உரிமை. அதை எக்காரணம் கொண்டும் விட்டுத்தர முடியாது. அரசாங்கம் அராஜகமான முறையில் நிலத்தை பிடுங்குகிறது. எட்டு வழிச்...
எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பே இல்லையாம்!: எடப்பாடியே சொல்லிட்டாரு!!

எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பே இல்லையாம்!: எடப்பாடியே சொல்லிட்டாரு!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
எட்டு வழிச்சாலைத் திட்டத்தை நூற்றுக்கு நான்கு அல்லது ஐந்து பேர்தான் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சேலத்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் நாமக்கல்லில் கட்சி நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் வந்திருந்தார். காமலாபுரம் விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, காவிரி மேலாண்மை ஆணையமும், நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட்டு, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் சார்பில் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். கர்நாடகா மட்டும் தங்கள் தரப்பு பிரதிநிதிகளை அறிவிக்காமல் இருந்தது. அதனால் மத்திய அரசாங்கமே, தாமாக முன்வந்து அதற்கான உறுப்பினர்களை நியமித்துள்ளது. ...
”விவசாயிகள் மீது எடப்பாடி பழனிசாமி நடத்தும் போர்!”; முன்னாள் எம்எல்ஏ விளாசல்!!

”விவசாயிகள் மீது எடப்பாடி பழனிசாமி நடத்தும் போர்!”; முன்னாள் எம்எல்ஏ விளாசல்!!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விவசாயம்
எட்டு வழிச்சாலைத் திட்டம் என்ற பெயரில் விவசாயிகள் மீது எடப்பாடி பழனிசாமி அரசாங்கம் அறிவிக்கப்படாத போரை தொடுத்திருக்கிறது என்று முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆர்.பார்த்திபன் தெரிவித்துள்ளார்.   விவசாயத்தை நாசமாக்கும் எட்டு வழிச்சாலைத் திட்டம் குறித்து திமுக தேர்தல் பணிக்குழு செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.ஆர்.பார்த்திபன் 'புதிய அகராதி' இணைய ஊடகத்திற்கு அளித்த பேட்டி:   சேலம் - சென்னை இடையேயான பசுமை வழிச்சாலை எனப்படும் எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்காக ஐந்தாவது நாளாக இன்று (ஜூன் 22, 2018) மாசிநாயக்கன்பட்டி, உடையாப்பட்டி திமுக தேர்தல் பணிக்குழு செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான தமிழக அரசு, எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்காக காவல்துறையினர் மூலம் விவசாயிகளை துப்பாக்கி முனையில் மிரட்டி அவர்களின் நிலங்களை கையகப்படுத்துகிறது. அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி விட்ட...
எங்கள் பிணங்களின் மீது எட்டுவழிச்சாலை போடுங்கள்!; கொதிக்கும் விவசாயிகள்; தகிக்கும் சேலம்!!

எங்கள் பிணங்களின் மீது எட்டுவழிச்சாலை போடுங்கள்!; கொதிக்கும் விவசாயிகள்; தகிக்கும் சேலம்!!

காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சிறப்பு கட்டுரைகள், சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
எட்டு வழிச்சாலை விவகாரத்தில், அக்னி நட்சத்திரம் அடங்கிய பின்னும் கடும் கொதிநிலையில் இருக்கிறது மாங்கனி மாவட்டம். 'ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு, இழப்பீடு தருகிறோம் என்பதை எப்படி ஏற்க முடியும்? எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கோடி தருகிறோம். உயிரைக் கொடுப்பாரா?,' என வெடித்துக் கிளம்பியுள்ளனர் விவசாயிகள். சேலத்தில் இருந்து சென்னைக்குச் செல்ல மூன்று வழித்தடங்கள் உள்ளன. இதனூடாக 334 கி.மீ., தொலைவு பயணிக்க வேண்டும். இதற்கான பயண நேரம் 5.24 மணி. ஆனால், புதிதாக அமையவிருக்கும் எட்டு வழிச்சாலை / பசுமைவழிச்சாலைத் திட்டத்தால், இந்தப் பயண தூரம் 57 கி.மீ., வரை குறைகிறது. அதாவது, 277.3 கி.மீ. தூரமாக பயணத்தொலைவு குறைகிறது. இதனால், வெறும் 3 மணி நேரத்தில், சேலத்தில் இருந்து சென்னைக்கு சாலை மார்க்கமாக பயணித்துவிட முடியும்.   எட்டு வழிச்சாலைத் திட்டத்தின் நோக்கம் குறித்து அரசுத்தரப்ப...
மேய்ச்சல் நிலமான மேட்டூர் உறுப்புக்கல்லூரி!;  சாதி பாசத்தில் எடப்பாடி பாரபட்சம்!!

மேய்ச்சல் நிலமான மேட்டூர் உறுப்புக்கல்லூரி!; சாதி பாசத்தில் எடப்பாடி பாரபட்சம்!!

கல்வி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
-சிறப்புக்கட்டுரை-   தமிழகத்தின் முதல் உறுப்புக்கல்லூரி என்ற அந்தஸ்து இருந்தாலும் ஆளும் தரப்பினரின் அலட்சியத்தால் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மண்ணிலேயே, மேட்டூர் அரசுக்கல்லூரி கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறும் அவலம் ஏற்பட்டுள்ளது.   சேலம், ஓமலூர் பிரதான சாலையில் கடந்த 1998ம் ஆண்டு பெரியார் பல்கலை தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் பெரியார் பல்கலையை ஈரோடு மாவட்டத்தில் தொடங்கும் திட்டமே இருந்தது. அப்போதைய திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மேற்கொண்ட முயற்சியால், சேலத்தில் இந்தப் பல்கலைக்கழகம் கொண்டு வரப்பட்டது.   இந்தப் பல்கலையின் நேரடி நிர்வாகத்தின் கீழ், கடந்த 2006ம் ஆண்டு மேட்டூரில் உறுப்புக்கல்லூரி ஒன்று தொடங்கப்பட்டது. பல்கலைக் கட்டுப்பாட்டின் கீழ் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முதல் உறுப்புக்கல்லூரியும் இதுதான். இதற்காக மேட்டூர் நான்கு ரோடு அருகே 15.75...
ஏற்காட்டில் கோடை விழா, மலர்க்கண்காட்சி தொடங்கியது;  5 நாள்கள் நடக்கிறது

ஏற்காட்டில் கோடை விழா, மலர்க்கண்காட்சி தொடங்கியது; 5 நாள்கள் நடக்கிறது

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களுள் ஒன்றான சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு, 'ஏழைகளின் ஊட்டி', 'மலைகளின் அரசன்' என்று அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் மே மாதம் கடைசி வாரத்தில் கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி நடத்தப்படும். இந்த ஆண்டு முன்னதாகவே அதாவது மே மாதம் இரண்டாவது வாரத்திலேயே கோடை விழா நடத்துவதற்கான ஆயத்தப்பணிகள் முழுவீச்சில் நடந்து வந்தது.     அதன்படி, ஏற்காட்டில் 43வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி இன்று (மே 12, 2018) தொடங்கியது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழாவைத் தொடங்கி வைத்து, அரங்குகளை பார்வையிட்டார்.     கோடை விழாவையொட்டி 24 ஆயிரம் கார்னேசன் மலர்கள், பல வண்ண ரோஜாக்கள் உள்பட ஒரு லட்சம் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தமிழ்நாடு தலைமைச் செயலக அமைப்பு, சேலத்தில் இருந்து விமான சேவை தொடங்கப்பட்டதைக் குறிக்கும் ...
சேலம்: எடப்பாடி வீடு அருகே உருவான ‘மினி கூவம்!’; நாறும் மாம்பழ நகரம்

சேலம்: எடப்பாடி வீடு அருகே உருவான ‘மினி கூவம்!’; நாறும் மாம்பழ நகரம்

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் போடிநாயக்கன்பட்டி ஏரி, ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கியுள்ளதோடு, இறைச்சிக் கழிவுகளால் நிரம்பி இன்னொரு கூவமாக உருமாறி வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற சில நாள்களில் நடந்த அனைத்துத்துறை ஆய்வு க்கூட்டத்தில், ஏரிகள், நீர்நிலைகளை தூர்வாரும் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்தார். இதற்காக, கடந்த நிதியாண்டில் மட்டும் 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் 1519 பணிகள் இந்த நிதியில் மேற்கொள்ளப்படும் என்றும் அப்போது கூறினார். குடிமராமத்துப் பணிகள் என்பது, நிலத்தடி நீரை செறிவூட்ட ஆகச்சிறந்த வழிமுறை என்பதால், துவக்க நிலையில் இத்திட்டத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்திலேயே பல ஏரிகள் ...
செரீனா வழக்கு, கங்கை அமரனின் பங்களா பறிப்பு; சசிகலா மட்டும்தான் காரணமா?

செரீனா வழக்கு, கங்கை அமரனின் பங்களா பறிப்பு; சசிகலா மட்டும்தான் காரணமா?

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, மதுரை, முக்கிய செய்திகள்
மதுரை செரீனா மீது கஞ்சா வழக்கு, ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் மீது போதைப்பொருள் வழக்கு, கங்கை அமரனின் பங்களா பறிப்பு நிகழ்வுகளின் பின்னணியில் சசிகலா மட்டுமே இருப்பது போலவும், ஜெயலலிதாவுக்கு அதில் எந்தத் தொடர்பும் இல்லை என்பது போலவும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான 'நமது புரட்சித்தலைவி அம்மா' செய்தி வெளியிட்டுள்ளது, மன்னார்குடி கும்பல் வட்டாரத்தை கொதிப்படையச் செய்துள்ளது. கடந்த மாதம் (பிப்ரவரி) 24ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று, ஆளும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக 'நமது புரட்சித்தலைவி அம்மா' தொடங்கப்பட்டது. நேற்று வெளியான (மார்ச் 2, 2018) இந்த நாளிதழில், ''இதுவே என் கட்டளை.... கட்டளையே என் சாசனம்'' என்ற தலைப்பில் மிக நீளமான கவிதை ஒன்று பிரசுரிக்கப்பட்டு இருந்தது. சித்ரகுப்தன் என்ற புனைப்பெயரில் அந்தக் கவிதை எழுத்தப்பட்டு இருந்தது. அந்த கவிதை இடம்பெற்ற பக்கத்தின் மேல் பகுத...
எம்எல்ஏக்களுக்கு சம்பள உயர்வு; மக்களுக்கு பேருந்து கட்டண உயர்வா?

எம்எல்ஏக்களுக்கு சம்பள உயர்வு; மக்களுக்கு பேருந்து கட்டண உயர்வா?

சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அரசுப்பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி வெகுசன மக்களிடம் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. எம்எல்ஏக்களுக்கு இரட்டை மடங்கில் சம்பளத்தை உயர்த்திவிட்டு, அதன் சுமையை சமாளிக்க சாமானியர்கள் பயணிக்கும் பேருந்து கட்டணத்தை உயர்த்தலாமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே அரசுப்பேருந்துகளின் பயணக் கட்டணம் உயர்த்தப்படலாம் என்ற தகவல்கள் பரவலாக பேசப்பட்டு வந்தன. இதற்கிடையே, ஜனவரி இரண்டாவது வாரத்தில் இருந்து, போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு தள்ளிப்போனது. போக்குவரத்துத் தொழிலாளர்கள் இறுதியாக கேட்டதோ 2.57 மடங்கு ஊதிய உயர்வு. ஆனால், அரசுத்தரப்பு அவர்களுக்கு வழங்கியது 2.44 மடங்கு. இடைப்பட்ட வித்தியாசம் வெறும் 0.13 சதவீதம் மட்டுமே. அதாவது கால் சதவீதத்திற்கும் குறைவு. ஆனால், நி...
தமிழக அரசு ஆஹா…ஓஹோ…!; ஆளுநர் உரையில் பாராட்டு; முழு விவரம்

தமிழக அரசு ஆஹா…ஓஹோ…!; ஆளுநர் உரையில் பாராட்டு; முழு விவரம்

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக சட்டப்பேரவை நடப்பு ஆண்டில் முதல்முறையாக ஆளுநர் உரையுடன் இன்று (ஜனவரி 8, 2017) தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஆங்கிலத்தில் தனது உரையை வாசித்தார். முன்னதாக அவர், 'அனைவருக்கும் வணக்கம்' என்று தமிழில் கூறினார். இடையில் எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டபோதும், 'உட்காருங்க' என்று தமிழில் பேசினார். தமிழகத்தில் நிதி பற்றாக்குறை இருப்பினும் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவது பாராட்டுக்குரியது. தமிழகத்தை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்வதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பாராட்டினார். ஆளுநர் உரையின் முழு விவரம்: மறைந்த முதல்வர் ஜெயலலிதா காட்டிய வழியில் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்கள் நலத்திட்டங்கள் நல்ல முறையில் இடைவிடாது செயல்படுத்தப்படுகின்றன. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக...